கக்கூஸ் (ஆவணப்படம்)

கக்கூஸ் (ஒலிப்பு) (Kakoos) ஒரு தமிழ் ஆவணத் திரைப்படம். மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்ய பாரதி இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இது மனித மலத்தைக் கையால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தை விளக்குகிறது.[1] மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்குக் காரணமாக உள்ள சாதி அரசியல், சமூக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மற்றும் உண்மைக் காட்சிகள் மூலமாக இப்படத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[2]

கக்கூஸ்
இயக்கம்திவ்ய பாரதி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஊடகங்கள், தொழிலாளர் அமைப்புகள், சமூகவலை தளங்கள் என பலதரப்பிலிருந்தும் இந்த ஆவணப்படம் பாராட்டைப் பெற்றுள்ளது. இருப்பினும் சட்ட ஒழுங்குச் சிக்கல் எழுமெனக் கருதி சில ஊர்களில் இதனைத் திரையிடத் தமிழ்நாடு காவற்துறையால் அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தடையையும் தாண்டி சில அமைப்புகளால் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "மாற்றம் வீச கோரும் 'கக்கூஸ்' முன்னோட்டம்". தி இந்து (தமிழ்). 21 நவம்பர் 2005. http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article9370332.ece. பார்த்த நாள்: 28 பிப்பிரவரி 2017. 
  2. "கக்கூஸ்: தமிழ் ஆவணப்பட உலகின் 'கல்ட்' ஆக்கம்!". tamil.yourstory.com. 27 பிப்பிரவரி 2017. https://tamil.yourstory.com/read/cff7b6aa2e/toilets-norwegian-documentary-39-s-39-cult-39-hack-. பார்த்த நாள்: 28 பிப்பிரவரி 2017. 
  3. தடைகளை உடைத்து திரையிடுவோம்: ‘கக்கூஸ்’ ஆவணப்பட பெண் இயக்குநர் உறுதி, தி இந்து (தமிழ்), மார்ச் 6, 2017.
  4. கக்கூஸ் படத்தை திரையிட காவல்துறை தடை, தொழிலாளர் கூடம், நாள்: மார்ச் 22, 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்கூஸ்_(ஆவணப்படம்)&oldid=3389466" இலிருந்து மீள்விக்கப்பட்டது