கங்காம்பிகை மல்லிகார்ச்சூன்
இந்திய அரசியல்வாதி
கங்காம்பிகை மல்லிகார்ச்சூன் (Gangambike Mallikarjun) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பெங்களூரின் 52 ஆவது மேயராக இவர் இருந்தார். நகரின் எட்டாவது பெண் மேயர் என்றும் அறியப்படுகிறார். செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில், செயநகர் வட்டாரத்தில் கங்காம்பிகைபோட்டியிட்டார்.[1][2]
கங்காம்பிகை மல்லிகார்ச்சூன் Gangambike Mallikarjun | |
---|---|
பெங்களுரின் 52 ஆவது மேயர் | |
பதவியில் 28 செப்டம்பர் 2018 – 28 செப்டம்பர் 2019 | |
முன்னையவர் | ஆர். சம்பத் ராசு |
பின்னவர் | எம் கௌதம் குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 நவம்பர் 1978 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகங்காம்பிகை மல்லிகார்ச்சூன் 11 நவம்பர் 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாளன்று பிறந்தார். வணிகப் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.[3] மல்லிகார்ச்சூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மல்லிகார்ச்சூன் தொழிலில் ஒரு பொறியியலாளராக இருந்தார்.[4] தம்பதியருக்கு ஒரு மகன் (பிரச்வல்) மற்றும் ஒரு மகள் (நந்தினி) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gangambike elected as Bengaluru's new Mayor". The Economic Times. 28 September 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gangambike-elected-as-bengalurus-new-mayor/articleshow/65996515.cms. பார்த்த நாள்: 19 April 2019.
- ↑ "Gangambike Mallikarjun elected mayor of Bengaluru" (in en). The Week. https://www.theweek.in/news/india/2018/09/28/gangambike-mallikarjun-elected-mayor-of-bengaluru.html. பார்த்த நாள்: 19 April 2019.
- ↑ 3.0 3.1 "Biography". BBMP. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ "Mayor, deputy have strong backers in their husbands" (in en). Deccan Herald. 29 September 2018. https://www.deccanherald.com/city/mayor-deputy-have-strong-695222.html. பார்த்த நாள்: 19 April 2019.