கங்கா பரணி வாசுதேவன்
கங்கா பரணி வாசுதேவன் (Ganga Bharani Vasudevan)(கங்கா பரணி என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் இந்திய வலைப்பூக்கள் பதிவர்-எழுத்தாளர் ஆவார்.[1] இவர் ஜஸ்ட் யூ, மீ அண்ட் எ சீக்ரெட் (2012), எ மினிட் டு டெத் (2015), எ சிப் ஆஃப் லவ் அண்ட் எ சிப் ஆஃப் காபி (2016) மற்றும் மர்டர் இன் தி எலிவேட்டர் (2018) ஆகிய புத்தகங்களை எழுதியவர் ஆவார்.
கங்கா தொழில்நுட்ப ஆய்வாளராகவும் உள்ளார். | |
---|---|
தொழில் | வலைப்பதிவர்; எழுத்தாளர் |
வகை | புனைகதை-திகில் கதை, காதல் கதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஏ சிப் ஆப் லவ் அண்டு காபி (2016) ஏ மிண்டி டொ டெத் (2015) ஜஸ்ட் யூ, மீ அண்டு எ சீக்கரட் (2012) |
இணையதளம் | |
gangabharani |
சுயசரிதை
தொகுசிறுவயதில், செய்தித்தாள்களின் கருத்துக்களைப் படிக்கவும் எழுதவும் கங்காவை அவரது தந்தை ஊக்கப்படுத்தினார்.[2] கக்கா தனது 15 வயதில் என் எக்சுஜிஎன் (NXGN)-ல் உங்கள் கருத்து பகுதியில் கட்டுரைகள் குறித்து கருத்துகளை எழுதத் தொடங்கினார்.[2][1] இவர் 2006-ல் வலைப்பதிவு செய்யத் தொடங்கினார். செய்தித்தாள்களால் ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்களில் தொடங்கி எழுத ஆரம்பித்தார்.[2][3][1] சுமார் ஐந்து வருடங்கள் கழித்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து புத்தகம் எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.[1] இவர் தனது முதல் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தினை தனது வலைப்பதிவில் எழுதினார்.[4][2] வெளியீட்டாளர்களிடமிருந்து பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, புத்தகம் எழுதுவது பற்றி வெளியீட்டாளர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டார்.[1][2]
கங்கா தனது வலைப்பதிவில் பல்வேறு போட்டிகளைக் கண்டுள்ளார். மேலும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் வலைப்பதிவு விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[2] இவரது சிறுகதை ஒன்று பீம்பம் என்ற குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது.[2] இவரது இரண்டு குறும்படங்கள், டைனி இசுடெப்சு அண்டு கேண்டில் (Tiny Steps and Candles), வீ கேர் (WE CARE) திரைப்பட விழாவில் விருதுகளை வென்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Wish to pen a book? Make a splash with blogging". September 8, 2015. https://indianexpress.com/article/lifestyle/life-style/wish-to-pen-a-book-make-a-splash-with-blogging/.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Padmanabhan, Geeta (August 16, 2017). "Words, lines and thoughts". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/it-girl-ganga-bharani-on-her-literary-journey/article14322836.ece.
- ↑ 3.0 3.1 Ramakrishnan, Deepa H.; Venugopal, Vasudha (May 13, 2016). "No desk job can keep them from their passion: writing". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/no-desk-job-can-keep-them-from-their-passion-writing/article5539237.ece.
- ↑ Ratnakumar, Evelyn (July 8, 2015). "Blog! It may win you a book contract". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/blog-it-may-win-you-a-book-contract/article7398428.ece.
- ↑ Samuel, Rufus John (May 21, 2016). "Sharing a secret". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/nxg/sharing-a-secret/article5862475.ece.
- ↑ Gowri, Devika (July 29, 2015). "‘I love playing guessing games with readers’". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/150729/lifestyle-booksart/article/%E2%80%98i-love-playing-guessing-games-readers%E2%80%99.