கசுபெகி (Kazbegi) என முன்னர் அழைக்கப்பட்ட "இசுடெபண்ட்சுமிண்டா" (Stepantsminda) என்பது வடகிழக்கு சியார்சியாவின்] மிசுகேத்தா மிட்டாநெட்டி பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். வரலாற்று ரீதியாகவும், இனரீதியாகவும் இந்த நகரம் கெவி மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது காசுபெகி நகராட்சியின் மையமாகும்.

இசுடெபண்ட்சுமிண்டா
நகரம்
இசுடெபண்ட்சுமிண்டாவின் ஒரு பார்வை
இசுடெபண்ட்சுமிண்டாவின் ஒரு பார்வை
ஆள்கூறுகள்: 42°39′27″N 44°38′43″E / 42.65750°N 44.64528°E / 42.65750; 44.64528
நாடு சியார்சியா
மெக்ரேமிசுகேத்தா மிட்டாநெட்டி
நகராட்சிகசுபெகி
ஏற்றம்1,740 m (5,710 ft)
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்1,326

பெயர் காரணம் தொகு

சியார்சிய பழமைவாதித் துறவியான இசுட்டீவன் என்பவரின் பெயரால் இதற்கு "இசுடெபண்ட்சுமிண்டா" என பெயரிடப்பட்டது. அவர் இந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டினார். பின்னர் இது சியார்சிய இராணுவ சாலையாக மாறியது.

புவியியலும், காலநிலையும் தொகு

இந்த நகரம் தெரெக் ஆற்றங்கரையில் 157 கிலோமீட்டர் (98 மைல்) நாட்டின் தலைநகரமான திபிலீசியின் வடக்கே கடல் மட்டத்திலிருந்து 1,740 மீட்டர் (5,710 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் வறண்ட, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் நீண்ட மற்றும் குளிர்ந்த கோடைகாலங்களில் இதன் காலநிலை மிதமான ஈரப்பதமாக இருக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியசு என்ற அளவில் இருக்கும். சனவரியில் சராசரியாக -5.2 டிகிரி செல்சியசு வெப்பநிலையுடன் இருக்கும் குளிர் மாதமாகும். சூலையில் சராசரியாக 14.4 டிகிரி செல்சியசு வெப்பநிலையுடன் இருக்கும். பதிவுசெய்யப்பட்ட குறைந்தபட்ச குறைந்தபட்ச வெப்பநிலை -34 டிகிரி செல்சியசு. மேலும், முழுமையான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகும். நகரின் சராசரி ஆண்டு மழை 790  மிமீ. (31.1 அங்குலங்கள்) என்ற அளவில் இருக்கிறது. [2]

இந்த நகரத்தின் எல்லா பக்கங்களிலும் பெரிய மலைகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இப்பகுதியின் மிகவும் குறிப்பிடத்தக்க மலையான கசுபெகி மலை நகரின் மேற்கே அமைந்துள்ளது. இரண்டாவது மிக முக்கியமான சனி சிகரம், நகரின் கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 4,451 மீட்டர் (14,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் புகழ்பெற்ற தெரியல் சியார்சு நதிப் பள்ளத்திற்கு [3] தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அடையாளங்கள் தொகு

காக்கேசியா மலைகளில் உள்ள அழகிய இருப்பிடத்திற்காக இந்த நகரம் அறியப்படுகிறது. மேலும் இது நடைப் பிரயாணம் செய்வபர்களுக்கும், மலையேற்றம் செய்பவர்களுக்கும் ஏற்ற ஒரு மையமாகும். உள்ளூர் ஈர்ப்புகளில் நகரத்தில் உள்ள கசுபெகி அருங்காட்சியகம், மானுடவியல் அருங்காட்சியகம், நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள கெர்கெட்டி டிரினிட்டி தேவாலயம், அத்துடன் காசுபெகி மலை, சுற்றியுள்ள காசுபெகி இயற்கை வன அல்பைன் தூந்திரம் மற்றும் காடுகள் ஆகியவை அடங்கும்.

கெர்கெட்டி டிரினிட்டி தேவாலயமும் பின்னணியில் வானவில்லும்

உருசியாவிற்கு எல்லை கடக்கும் இடம் தொகு

 
எல்லை கடக்கும் இடத்தின் சியார்சிய பகுதி.

உருசிய கூட்டமைப்பிற்கு வடக்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் சியார்சிய எல்லையைக் கடக்கும் இடமாக "லார்சி" உள்ளது. இது,2010 மார்ச் 1 அன்று திறக்கப்பட்டது. இது சுங்கங்கள், உலகின் அனைத்து பலதரப்பு குடிமக்களுக்கும் 24 மணிநேரமும் திறந்திருக்கும். எல்லை தாண்டிய சாலை ஒரு மலை சுரங்கத்தில் உள்ளது. நடந்து சென்று இதனை கடக்க முடியாது.

உள்கட்டமைப்பு தொகு

நகரத்தில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க ஏஜிஹெச் ஹோல்டிங் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக 2016 திசம்பரில் அறிவிக்கப்பட்டது. ஏஜிஹெச் நிறுவனத்தால் நிறுவப்பட்ட "ஏவியேட்டர்" நிறுவனம் வாடகை விமான சேவையை வழங்கும். இது சியார்சியாவிலுள்ள எந்த விமான நிலையங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் தனிப்பட்ட குறிப்பிட்ட தூர விமானங்களையும் உள்ளடக்கும். [4]

குறிப்புகள் தொகு

  1. வார்ப்புரு:Georgian Census 2014
  2. "Stepantsminda climate: Average Temperature, weather by month, Stepantsminda weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  3.   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Darial". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. 
  4. Charkviani, Nikoloz (13 December 2016). "Adjara Group to Build an International Airport in Kazbegi and Invest More in Aviation". The Financial. பார்க்கப்பட்ட நாள் 15 December 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுபெகி&oldid=3422747" இலிருந்து மீள்விக்கப்பட்டது