கசூ (kazoo) என்பது ஓர் இசைக் கருவியாகும். இது கையடக்க வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் இசையானது முனங்கும் வகையில் இருக்கும். வாசிக்கும் மனிதரின் குரலுக்கு ஒத்திசையாக இதிலிருந்து வெளிபடும் இசையும் இருக்கும்.

உலோக காஸூ
கசூவின் வடிவங்கள்

வாசித்தல் தொகு

இது காற்றிசைக் கருவியாக இருந்தாலும் இதில் காற்றை ஊதாமல் முனங்குவதால் இசை வெளிப்படுகிறது.[1] வாசிப்பவர் முனங்குவதால் ஏற்படும் அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இதிலுள்ள சவ்வு (membrane ) அதிர்ந்து இசை உருவாகிறது.[1]

வடிவம் தொகு

கையடக்க வடிவில் இருக்கும் இவை உலோகம் அல்லது நெகிழி மூலம் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 How to Play Kazoo, Kazoos.com, 2013, அணுக்கம் 12-07-2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசூ&oldid=3704799" இலிருந்து மீள்விக்கப்பட்டது