கசேயா அணை
சப்பானின் நாரா மாகாணத்தில் உள்ள ஓர் அணை
கசேயா அணை (Kazeya Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக 101 மீட்டர் உயரமும் 329.5 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி நோக்கத்திற்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 553 சதுர கிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 446 எக்டேர்களாகும். 1,30,000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1954 ஆம் ஆண்டு தொடங்கி 1960 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1][2]
கசேயா அணை Kazeya Dam | |
---|---|
அமைவிடம் | நாரா மாநிலம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 34°2′40″N 135°47′16″E / 34.04444°N 135.78778°E |
கட்டத் தொடங்கியது | 1954 |
திறந்தது | 1960 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 101 மீட்டர் |
நீளம் | 329.5 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 130000 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 553 சதுரகிலோ மீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 446 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kazeya Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ YU, Wansik; NAKAKITA, Eiichi; YAMAGUCHI, Kosei (2013). "Assessment of High-resolution Ensemble NWP Rainfall for Flood Forecast of Relative Large River Basin in Japan". 京都大学防災研究所年報. B 56 (B): 391–399. பன்னாட்டுத் தர தொடர் எண்:0386-412X.