கசோரா விட்டா
கசோரா விட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | கெசுபெரிடே
|
பேரினம்: | கசோரா
|
இனம்: | H. விட்டா
|
இருசொற் பெயரீடு | |
கசோரா விட்டா (பட்லர், 1870)[1] |
கசோரா விட்டா,(Hasora vitta) வெற்று வரிகளுடைய தாவி, [2][3][4] எனும் பட்டாம்பூச்சி [3] [4] தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. [5]
விளக்கம்
தொகுஇந்தப் பட்டாம்பூச்சியின் இறக்கை அளவானது 45 முதல் 55 மிமீ வரை உள்ளது. இறக்கை அடர் பழுப்பு வண்ணத்தில் காணப்படும். இது பொதுவான வரிகளுடைய தாவிகளை (ஹசோரா குரோமஸ் ) ஒத்திருக்கிறது. ஆனால் பின் இறக்கையின் வெளிப்புறமாக அடிப்பக்கத்தில் பரந்த வெள்ளை பட்டை இதில் காணப்படும். மேலும் இதன் இறக்கைகள் பளபளப்பாக உள்ளன.[6][7]
பிற வேறுபாடுகள்:
ஆண்: முன் இறக்கையின் மேற்பகுதியில் ஓர் புள்ளிக் காணப்படும். சில நேரங்களில் ஒன்றுக்குப் பதில் மூன்று புள்ளிகள் இருக்கும். முன் இறக்கையின் மேற்பகுதியில் எந்த பட்டைகளும் இல்லை. [6]
பெண்: பெண் பட்டாம்பூச்சியின் இறக்கையில் காணப்படும் புள்ளியானது பெரியதாகவும் கூடுதலாக இரண்டு புள்ளிகளும் காணப்படும். [6]
வகைபாட்டியல்
தொகுபட்டாம்பூச்சிக்கு இரண்டு துணைச்சிற்றினங்கள் உள்ளன:
- கசோரா விட்டா விட்டா - தெற்கு மியான்மர் (டவ்னாஸ்), மலாயா தீபகற்பம், இந்தோனேசிய தீவுக்கூட்டம் மற்றும் பிலிப்பைன்ஸ் . [4][8]
- கசோரா விட்டா இண்டிகா - தென்னிந்தியா, சிக்கிம், அசாம், வட மியான்மர், தாய்லாந்து மற்றும் தென் மேற்கு சீனா . [4][8]
சரகம்
தொகுஇந்தியாவில் தெற்கில் (கனாரா), சிக்கிம், அசாம் [2] மற்றும் மியான்மர் கிழக்கு, தாய்லாந்து, சீனாவின் மேற்கு, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பொதுவான பட்டைத் தாவிகள் காணப்படுகிறது. [4][8]
நிலை
தொகுஎவன்ஸ் (1932) கருத்தின்படி இவை அரிதானது வகையினைச் சார்ந்தது அல்ல.[8] வின்டர்-பிளைத் (1957) கூற்றின்படி பொதுவானதல்ல எனப் பட்டியலிடப்படுகிறது.[6]
உணவுத் தாவரங்கள்
தொகுஇதனுடைய கம்பளிப்பூச்சிகள் டெரிசு இனங்கள், புங்கை இனங்கள், மில்லெட்டிய எக்சுடென்சா, எண்டோசமாரா ரேசிமோசா, மில்லெட்டிய கிளாப்ரா மற்றும் சபதொபசு பெருகினெசு முதலிய தாவரங்களை உணவாக உண்ணுகின்றன. [4][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:LepIndex Retrieved April 20, 2018.
- ↑ 2.0 2.1 R.K., Varshney; Smetacek, Peter (2015). A Synoptic Catalogue of the Butterflies of India. New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi. p. 26. எண்ணிம ஆவணச் சுட்டி:10.13140/RG.2.1.3966.2164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-929826-4-9.
- ↑ 3.0 3.1 TOL web page on genus Hasora பரணிடப்பட்டது 2020-10-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Markku Savela's website on Lepidoptera - page on genus Hasora.
- ↑ W. H., Evans (1949). A Catalogue of the Hesperiidae from Europe, Asia, and Australia in the British Museum. London: British Museum (Natural History). Department of Entomology. p. 68.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170192329.
- ↑ Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173713545.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society. p. 315, ser no I 1.13.
- ↑ Ravikanthachari Nitin; V.C. Balakrishnan; Paresh V. Churi; S. Kalesh; Satya Prakash; Krushnamegh Kunte (2018-04-10). "Larval host plants of the buterfies of the Western Ghats, India". Journal of Threatened Taxa 10 (4): 11495–11550. doi:10.11609/jott.3104.10.4.11495-11550. http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/3104/4402.
குறிப்புகள்
தொகுஅச்சில்
- Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
- Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. ISBN 978-8173713545.
- Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329.
இணையம்
- Beccaloni, George; Scoble, Malcolm; Kitching, Ian; Simonsen, Thomas; Robinson, Gaden; Pitkin, Brian; Hine, Adrian; Lyal, Chris. "The Global Lepidoptera Names Index (LepIndex)". Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ப்ரோவர், ஆண்ட்ரூ VZ, (2007). ஹசோரா மூர் 1881. பதிப்பு 21 பிப்ரவரி 2007 (கட்டுமானத்தில் உள்ளது). தி ட்ரீ ஆஃப் லைஃப் வலைத் திட்டத்தில் ஹசோரா இனத்தின் பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம் பக்கம் http://tolweb.org/ .
- "Markku Savela's website on Lepidoptera".