கச்சபால ஐயர்

கச்சபால ஐயர் என்பவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவரது ஐந்து பாடல்கள் தனிப்பாடல் திரட்டு நூலில் இடம் பெற்றுள்ளன. விநாயகப் பெருமான்மீது பற்றுக் கொண்டவர். கணாபத்தியம் இவரது வழிபாடு. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது பெயர் மகாவித்வான் என்னும் பட்டப்பெயருடன் உள்ளது.[1]

இவரது பாடல்கள் திரிபு அணிச்-சுவை மிக்கனவாகக் காணப்படுகின்றன. பாடல்களில் விருத்தம், கட்டளைக் கலித்துறை ஆகிய பாவினங்கள் காணப்படுகின்றன. இவரது பாடல்கள் திரட்டு நூலில் உள்ளமையாலும், பாடல்கள் கோவை நூல் பாடல் யாப்பமைதியைக் கொண்டிருப்பதாலும் இவரது நூல் விநாயகர் கோவை என்பது ஆகலாம்.

மேற்கோள்தொகு

தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 113

அடிக்குறிப்புதொகு

  1. கச்சபாலம் என்பது கபாலீசுரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சபால_ஐயர்&oldid=2717692" இருந்து மீள்விக்கப்பட்டது