கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை

யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் வடக்கே தென்மராட்சிப் பகுதியில் உள்ள கச்சாய் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் பாடசாலை ஆகும். யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தற்போது பத்தாம் வகுப்பு வரை நடத்தபடுகிறது, இப் பாடசாலையில் இப்பொழுது 29 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே வேளை இப் பாடசாலை மகாவித்தியாலம் ஆக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக முயற்சி செய்து வந்தாலும் இதுவரை அது சாத்தியம் அற்றதாகவே உள்ளது. கச்சாயில் இருக்கும் மாணவர்களில் பலர் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும், கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலத்துக்கும் செல்வதே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.

யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
அமைவிடம்
கச்சாய், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
அதிபர்திரு.உதயகுமாரன்.K.
தரங்கள்1–10
இணையம்
யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலையின் தளத் தோற்றம்

பாடசாலைப் பண் தொகு

கச்சாய் கலாசாலை வாழ்கவே - வாழ்க வாழ்க
கச்சாய் கலாசாலை வாழ்கவே - தினம் தினம் தினம்
கச்சாய் கலாசாலை வாழ்கவே - வாழ்க வாழ்க
கச்சாய் கலாசாலை வாழ்கவே
பெற்றோரை ஆசிரியரை பெருமையோடு வாழ்த்துவோம்
பேணி வித்தை வளார்க்கும் கல்விப் பகுதியாரைப் போற்றுவோம் கச்சாய் கலாசாலை....
செந்தமிழாம் இனிய மொழியைச் சிறந்து பரவச் செய்குவோம்
தேசத்திற்கே தேவையான வேறுகலையும் பயிலுவோம் கச்சாய் கலாசாலை....
கமலம் பூத்த கழனி சூழ்ந்த கச்சாய் வித்தியாலயம்
கடமையே தன் உடமையாக காலமெல்லாம் வாழ்கவே கச்சாய் கலாசாலை....

ஆசிரியர்கள் தொகு

  • தலைமை ஆசிரியர் : கே. உதயகுமாரன்
  • உதவி தலைமை ஆசிரியர் : எஸ். நவபாலன்

வெளி இணைப்புகள் தொகு