கஞ்சநாயக்கன்பட்டி


கஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமம் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் உள்ளது. சேலத்திலிருந்து சுமார் 26 கி.மீதொலைவிலும், ஓமலூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரை சுற்றிலும் கோட்டைமேடு, ஆண்டிப்பட்டி, பாப்பிச்செட்டிப்பட்டி, சின்னத்திருப்பதி, சந்தனூர், பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி போன்ற பல ஊர்களும் உள்ளன.

கஞ்சநாயக்கன்பட்டி
ஊராட்சி
பஞ்சாயத்து அலுவலகம்
,
வடமனேரி
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
வட்டம்காடையாம்பட்டி
அரசு
 • வகைபஞ்சாயத்து தலைவர்
 • தலைவர்Vacant
மொழி
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN636 305
Telephone code04290

கோவில்கள் தொகு

இவ்வூரின் கிழக்கே 360 ஏக்கர் பரப்பளவில் வடமநேரி உள்ளது. அந்த ஏரியில் ”நீர் மாரியம்மன் கோவில் “ அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதங்களில் பண்டிகைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பண்டிகையின் போது அலகு குத்துதல், கரகம் எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்வூரின் தெற்கே சிவன் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஓம் சக்தி கோவில், கூட்டுறவு வங்கி, திரௌபதி அம்மன் கோவில் போன்றவைகள் இருக்கின்றன. இங்குள்ள சிவன் மற்றும் சிவன் கோவில்களில் திருமண சமயங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இவ்வூரின் மேற்கே சின்னத்திருப்பதி என்ற மிகவும் பிரசித்திப்பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்துள்ள கோவில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் நடைபெறும் தேர் திருவிழாவினைக் காண பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவர்.

போக்குவரத்து தொகு

01,09,014,015,99,100, வினாயகம் மினி பஸ், கே.ஆர்.கே.எஸ் மினி பஸ் போன்ற பேருந்துகள் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

[1]

  1. https://www.mapsofindia.com/villages/tamil-nadu/salem/omalur/kanjanayachanpatti.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சநாயக்கன்பட்டி&oldid=3109473" இலிருந்து மீள்விக்கப்பட்டது