கோட்டைமேடு

கோட்டைமேடு என்பது சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு சிற்றூராகும். இவ்வூர் மேலூர், கீழூர், முஸ்லீம் தெரு, புளியமரத்து கொட்டாய் என நான்கு பகுதிகளைக் கொண்டது.

கோட்டைமேடு
கிராமம்
left
கிழக்கு கரையிலிருந்து வடமனேரி
ஆள்கூறுகள்: 11°48′50″N 78°02′57″E / 11.81389°N 78.04917°E / 11.81389; 78.04917
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
வட்டம்காடையாம்பட்டி
அரசு
 • வகைஊராட்சி அமைப்பு
 • தலைவர்Vacant
 • வார்டு உறுப்பினர்Vacant
மொழி
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
636305
Telephone code04290

இதன் வடக்கில் வடமனேரி, (வடமனேரி சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மிகப்பெரிய ஏரியாகும்) கிழக்கில் மேற்கு சரபங்கா நதி, மேற்கில் சோலைகொட்டாய், தெற்கில் கலர்காடு ஆகியவை இதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரின் தென்மேற்கில் ஒடசல் ஏரி உள்ளது. தாராபுரம் மற்றும் கஞ்சனாயக்கன்பட்டியை இணைக்கும் புது ரோடு சாலை கோட்டைமேடு வழியாகச் செல்கிறது.

தொழில்கள்

தொகு

கோட்டைமேடு ஊரின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், கரும்பு, பருத்தி, சாமந்தி பூ, காய்கறிகள் ஆகியன முக்கியமாக விளைவிக்கபடுகிறது. மேலும் விசைத்தறி, கைத்தறி மற்றும் பாய் உற்பத்தி போன்ற தொழிலிலும் மக்கள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் மற்றும் கட்டிட கூலிகளாகவும் உள்ளனர்.

வழிபாட்டுத்தலங்கள்

தொகு
 
கோட்டைமாரியம்மன் கோவில்

இந்து மற்றும் இஸ்லாம் வழிபாட்டுத்தலங்கள் இங்கு உள்ளன. ஸ்ரீ கோட்டைமாரியம்மன் திருக்கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவில் போன்றவை உள்ளன. கோட்டைமாரியம்மன் கோவில் சித்திரை (மே மாதம்) மாதங்களிலும், செல்லாண்டியம்மன் ஆடியிலும் (சூலை) பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஜமாத் பள்ளிவாசல் இங்கு உள்ளது.

கல்வி

தொகு

கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறது. இங்கு மொத்தம் 200 மாணவர்கள் பாடம் படிக்கின்றனர். இவ்வூரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பள்ளியில் கற்கின்றனர். மொத்தம் எட்டு ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளனர். இப்பள்ளி காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தினால் நிர்வகிக்கபடுகிறது. பள்ளியினை சிறப்பாக செயல்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு

[1] [2]

  1. "tamilmurasu news". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2018-07-17.
  2. "Pums-Kottaimedu-New-School". Archived from the original on 2018-07-23. பார்க்கப்பட்ட நாள் 2018-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டைமேடு&oldid=3893706" இலிருந்து மீள்விக்கப்பட்டது