கஞ்சனூர் இராமலிங்கேசுவரர் கோயில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
கஞ்சனூர் இராமலிங்கேசுவரர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுசென்னை-விழுப்புரம் சாலையில் விழுப்புரத்திற்கு முன்பாக உள்ள ரயில்வே கேட்டையொட்டி வலது புறம் செல்லும் விழுப்புரம்-செஞ்சி/திருவண்ணாமலை சாலையில் 12ஆவது கிமீ தொலைவில் உள்ள கூட்ரோட்டை அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது. தென் நாட்டில் கஞ்சனூர் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இதனை வட கஞ்சனூர் என்று கூறுகின்றனர். இருப்பினும் இவ்வூர் கஞ்சனூர் என்றே அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் இராமலிங்கேசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
தொகுவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. இறைவி சன்னதி தனியாக உள்ளது.[1]