கடகத்தூர் சோமேசுவரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடகத்தூர் சோமேசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், கடகத்தூரில் உள்ள சிவன் கோயிலாகும். [1]

அருள்மிகு சோமேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:கடகத்தூர், தருமபுரி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:தர்மபுரி
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:சோமேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு

கோயிலின் பழமை

தொகு

இக்கோயிலின் பழைய கல்வெட்டு கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, எனவே இக்கோயில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவோ அல்லது அதற்கு முற்பட்ட சோழர் காலக் கோயில் எனக் கருதப்படுகிறது. இக்கோயில் இறைவன் "சோளீசுவரமுடைய நாயனார்" என கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார். சோளீசுவரமுடையார் என்ற பெயரே பிற்காலத்தில் சோமேசுவரர் என மருவியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கோயிலமைப்பு

தொகு

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் என அமைந்துள்ளது. அம்மனான "மீனாட்சி" தனிச்சந்நதி இல்லாமல் மகாமண்டபத்தின் வலப்புறத்தில் தெற்கு நோக்கியவாறு உள்ள திருமுற்றத்தில் உள்ளார். இக்கோயிலின் திருவுண்ணாழியின் வாயிலில் இடப்புறம் விநாயகரும், வலப்புறம் ஆறுமுகனும் உள்ளனர். [2] இக்கோயிலுக்கு தலமரமாக வில்வம் உள்ளது.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தர்ம்புரி சிவன் கோயில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 180.