கடமலைக்குண்டு

நரசிங்கபுரத்தின் புதிய பெயர்

கடமலைக்குண்டு (Kadamalaigundu Graam Panchaayat) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மயிலாடும்பாறைக்கு அருகில் உள்ளது. இதன் அருகே அழகான இடங்களும், வைகை ஆறும், 8 கிலோ மீட்டர் தொலைவில் [சின்னச்சுருளி என்ற மேகமலை அருவி | அதன் மறுபக்கம் சுருளி அருவியும்] உள்ளது.

இந்த ஊரின் பழைய பெயர் நரசிங்கபுரம். 1992 முன்பு வரை அரசு ஆவணங்களில் நரசிங்கபுரம் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் நரசிம்மவர்ம பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி.

வரலாற்று எச்சங்கள் தொகு

1. மக்கள் கூட்டம் என்ற மலைக்கு கிழக்குப் பக்கம் உள்ள கோட்டைக்காடு எனும் விவசாய நிலப் பகுதிகள். 2. மயிலாடும்பாறை க்கு அருகில் உள்ள வைகை ஆற்றின் குறுக்கே வெறும் பெரிய பெரிய கொண்டாங்க களால் கட்டப்பட்டு இன்றளவும் உடைந்த நிலையில் உள்ள தடுப்பணை. 3. அந்த தடுப்பணைக்கு மேற்கே வைகையாற்றின் மேற்குக் கரையில் கல்லால் கட்டப்பட்ட கல்மண்டபத்துடன் கூடிய சிவன் கோயில். 4. அதேபோல் இந்த தடுப்பணை கிழக்கே உள்ள சாவக்கட்டு மலை உச்சியிலும், மேற்கே உள்ள சங்கிலி கரடு உச்சியிலும் நீள்சதுர சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்டு இன்று இடிந்து தரைமட்டமாகி காட்சியளிக்கும் கண்காணிப்புக் கோபுரங்கள்.

அடிப்படை வசதிகள் தொகு

  • மின்விசைக் குழாய்கள் 22
  • கைக்குழாய்கள் 35
  • மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10
  • தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3
  • உள்ளாட்சிக் கட்டடங்கள் 20
  • உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6
  • ஊரணிகள் அல்லது குளங்கள் 4
  • வாரச்சந்தை 1
  • ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10
  • பேருந்து நிலையம் 1
  • சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12.

மருத்துவமனைகள் தொகு

1. சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனை 2. விவேகானந்தா மருத்துவமனை 3. உண்ணாமலை அம்மாள் மருத்துவமனை 4. ராஜாஸ் மருத்துவமனை 5. மதுமதி மருத்துவமனை 6. ரமேஷ் மருத்துவமனை

சிற்றூர்கள் தொகு

1. கரட்டுப்பட்டி 2. மேலப்பட்டி 3. தென்பழனி காலனி 4. கடமலைக்குண்டு 5. நேருஜி நகர்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமலைக்குண்டு&oldid=3441364" இலிருந்து மீள்விக்கப்பட்டது