கடல்சார் அருங்காட்சியகம் (இந்தோனேசியா)

கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum (Indonesia)) (இந்தோனேசிய மொழி: Museum Bahari ), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளுக்குள் அமைந்துள்ள பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கடல் வரலாறு மற்றும் தற்போதைய இந்தோனேசியாவின் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றில் இந்த அருங்காட்சியகம் கவனம் செலுத்துகிறது.

கடல்சார் அருங்காட்சியகம் (இந்தோனேசியா)
Museum Bahari
கடல்சார் அருங்காட்சியகத்தில் முன்னாள் கிடங்குப்பகுதி(இந்தோனேசிய மொழி: Museum Bahari). முன்பகுதியில் ஒருகாலத்தில் மரக்கட்டத்திற்கு ஆதரவாக இருந்த கொக்கி, வைக்கப்பட்ட பொருள்களை மழையிலிருந்து காப்பாற்ற அமைக்கப்பட்டது
கடல்சார் அருங்காட்சியகம் (இந்தோனேசியா) is located in ஜகார்த்தா
கடல்சார் அருங்காட்சியகம் (இந்தோனேசியா)
Location within ஜகார்த்தா
நிறுவப்பட்டதுசூலை 7, 1977
அமைவிடம்ஜே.எல். பாசர் இகான் 1, சுண்டா கேல்பா, ஜகார்த்தா 14440, இந்தோனேசியா
ஆள்கூற்று6°7′37.14″S 106°48′29.88″E / 6.1269833°S 106.8083000°E / -6.1269833; 106.8083000
வகைகடல்சார் அருங்காட்சியகம்
இயக்குனர்தாபிக் அகமது
வலைத்தளம்www.museumbahari.org

இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொணரப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் பிற கடல்சார் பொருட்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில்தெற்கு சுலவேசியின் புகிஸ் மக்களின் புகழ்பெற்ற பினிசி ஸ்கூனர்ஸ் எனப்படுகின்ற கப்பல் பாய்மரங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது தற்போது உலகின் கடைசியாக கடலில் செல்கின்ற கப்பல்களில் காணப்படுவனவாகும்.[1] ஜனவரி 2018 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தின் பெரும்பகுதி அங்கு ஏற்பட்ட தீ விபத்தின்போது அழிந்தது..

அருங்காட்சியகத்தில் டச்சு பாணியிலான கிடங்கு.

முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளில் கடல்சார் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. ஜகார்த்தாவின் முக்கியமான நதியான சிலிவங் ஆற்றின் வாயில் பகுதியில் இந்த கிடங்குகள் கட்டப்பட்டன. இந்த கிடங்குகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அவை வெஸ்ட்ஜிட்ஷே பாகுய்சென் அல்லது "மேற்குக் கரையின் கிடங்குகள்" (1652–1771 முதல் கட்டப்பட்டது) மற்றும் ஓஸ்ட்ஜிஜ்ட்ஷே பாகுய்சென் அல்லது "கிழக்குக் கரையின் கிடங்குகள்" என்பனவாகும். மேற்கு கிடங்கில் நான்கு கட்டிடப் பிரிவுகள் உள்ளன, அவற்றில் மூன்று பிரிவுகள் தற்போது இந்த அருங்காட்சியகத்திகாகப் பயன்படுத்தப்பட்டு வருடுகின்றன. இவை முன்னர் ஜாதிக்காய் மற்றும் மிளகு போன்ற மசாலாப் பொருள்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. மேலும் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு துறைமுகங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக காபி, தேநீர் மற்றும் துணி வகைகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டன.

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சில கிடங்குகள் மறுபடியும் கட்டப்பட்டன. நகரத்திற்கும் கிடங்குகளுக்கும் இடையில் அதிக இடைவெளியை உருவாக்குவதற்காக இக்கிடங்குகள் மீண்டும் கட்டப்பட்டன. கற்களிலும், சில கதவுகளுக்கு மேலும் காணப்படுகின்ற வெவ்வேறு தேதிகள் அருங்காட்சியகத்தின் அவை பழுதுபார்க்கப்பட்ட அல்லது விரிவுசெய்யப்பட்ட அல்லது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட கட்டட அமைப்புகளின் வேலைகளைக் குறிக்கின்றன.

அருங்காட்சியகத்தின் முன்னால் கிடங்குகளுக்கும் நகரச் சுவருக்கும் இடையில், இந்நிறுவனமானது செம்பு மற்றும் தகரம் பொருட்களை வைத்திருந்தது. இந்த உலோகங்கள் மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மரச்சட்டம் போன்ற அமைப்போடு அவை அமைக்கப்பட்டன. இந்த இடமானது அவ்வப்போது ரோந்துப் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டது, ஏனென்றால் அதற்கு முன்னால் நகர சுவரில் உள்ள பாதை குறுகியதாக அமைந்துள்ளது. மரத்தாலான கேலரி நீர்முனையை எதிர்கொள்ளும் கிடங்குகளின் இரண்டாவது மாடியில் இணைக்கப்பட்டிருந்தது, . ஒரு காலத்தில் கேலரியை இணைக்கப் பயன்பட்ட பெரிய இரும்புக் கொக்கிகள் இன்னும் காணப்படுகின்றன.[2]

ஹார்பர்மாஸ்டர் கோபுரத்திலிருந்து கடல்சார் அருங்காட்சியகத்தின் ஒரு தோற்றம் (இடது) சுண்டாகேலபா துறைமுகம் (வலது)

கடல்சார் அருங்காட்சியகத்தின் முன்னால் மீதமுள்ள நகரச் சுவர் ஜீபர்க் கோட்டையிலும், இன்னும் மீதிப் பகுதி மேற்கிலும் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் படேவியாவைச் சுற்றியுள்ள சுவரில் தற்போது எஞ்சியுள்ளன. அந்த காலத்திலிருந்த இருபத்தி மூன்று கோட்டைகளில் தற்போது ஜீபர்க் மற்றும் குலேம்போர்க் மட்டுமே உள்ளன.[3]

சுற்றியுள்ள பகுதிகள்

தொகு

இந்த அருங்காட்சியகம் ஜகார்த்தாவின் வரலாற்று மையமான ஜகார்த்தா ஓல்ட் டவுனில் அமைந்துள்ளது. இங்கிருந்து நடக்கும் தொலைவில் பெடேவியாவின் வரலாற்றினைக் கொண்டுள்ள பிற பாரம்பரியங்கள் உள்ளன. அவை ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம், வயாங் அருங்காட்சியகம் மற்றும் சுந்த கெலாபா துறைமுகம் என்பனவாகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Maritime Museum Indonesia". Museum Bahari Indonesia. Museum Bahari Indonesia. Archived from the original on April 15, 2013. பார்க்கப்பட்ட நாள் January 3, 2010.
  2. Historical Sites of Jakarta. Cipta Loka Caraka Foundation, Jakarta.
  3. "Historical >>Sites of Jakarta">Adolf Heuken SJ (2007). Historical Sites of Jakarta. Cipta Loka Caraka Foundation, Jakarta.

வெளி இணைப்புகள்

தொகு