கடல்வழிப் போக்குவரத்து
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடல் வழிப் போக்குவரத்து என்பது கப்பல்கள் அல்லது படகுகள் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடல் வழியாகச் செல்லும் போக்குவரத்தைக் குறிப்பதாகும். இந்தப் போக்குவரத்து உள்நாட்டளவில் அதிகப் பயன்பாடுகளற்றதாக இருப்பினும் பன்னாட்டளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.
நன்மைகள்
தொகு- எடை அதிகமாக உள்ள பொருட்களை அதிகளவில் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடிகிறது.
- அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம்.
- இது பன்னாட்டு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தீமைகள்
தொகு- கடல்கள் இல்லாத நாடுகளுக்கு இப்போக்குவரத்து செயல்படுத்த இயலாது.
- கூடுதலான பயண நேரம் செலவாகிறது.