அடைப்பு (போரியல்)

(கடல் அடைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடைப்பு (Blockade) என்பது போரில் ஒரு தரப்பு எதிர் தரப்பின் குறிப்பிட்ட பகுதிக்கு உணவு, தளவாடங்கள், தகவல்கள் ஆகியவை செல்வதை மொத்தமாக துண்டிக்க மேற்கொள்ளும் முயற்சியினைக் குறிக்கிறது. இது பகுதி அல்லது நாடளவில் நிகழும் முற்றுகையாகும். மிகப் பெரும்பாலும் அடைப்புகள் கடற்பகுதிகளில் தான் நடை பெறுகின்றன. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல்வழியாக நடைபெறுவதால், ஒரு அடைப்பு வெற்றிபெற கடல்வழிகளைத் துண்டிப்பது இன்றியமையாததாகிறது. கடல்வழி அடைப்பில், எதிரி நாட்டுத் துறைமுகங்களின் வாயில்களில் பொர்க்கப்பல்கள் ரோந்து செய்து, கப்பல்கள் எவையும் செல்லவிடாமல் தடுப்பது ஒரு பரவலான உத்தி. கடற்கரையில்லாத நாடுகளுக்கு நிலவழியே அனைத்து தொடர்புகளைத் துண்டிப்பதும் அடைப்பே. 20ம் நூற்றாண்டில் வான்படைகளின் வளர்ச்சிக்குப் பிறகு அடைப்பின் ஒரு பகுதியாக வான்வழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்படுகிறது.[1][2][3]

நெப்போலியப் போர்களின் போது பிரெஞ்சுத் துறைமுகம் தூலானை ரோந்து செய்யும் பிரித்தானியக் கடற்படை

மேற்கோள்கள் தொகு

  1. "Opening Borders: Armenia's Economic Risks". www.evnreport.com (in ஆங்கிலம்). 9 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  2. Sahakyan, Armen (2014-02-20). "Economic Blockades and International Law: The Case of Armenia". The Armenian Weekly (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  3. Richard Harding (2002). Seapower and Naval Warfare, 1650–1830. Routledge. https://books.google.com/books?isbn=0203029496. பார்த்த நாள்: 7 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைப்பு_(போரியல்)&oldid=3752155" இலிருந்து மீள்விக்கப்பட்டது