கடல் தூண்
கடல் தூண் (Stack) என்று அழைக்கப்படுவது. கடல் அரிப்பினால் ஏற்படும் நிலத்தோற்றமாகும். கடல் அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. கடல் அரிப்பினால் கடலில் கடலோரத்தில் எஞ்சி இருக்கின்ற பாறையானது தூணைப் போல் உயரமாக இருப்பவை ஆகும்.[1] அவை தூணைப்போல இருப்பதால் கடல் தூண் என்ற பெயர்பெற்றன.[2] காற்றும், நீரும் சேர்ந்த செயல்முறைகளால் காலப்போக்கில் கடல் தூண்கள் உருவாகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Easterbrook, D.J. "Surface Processes and Landforms", p. 442, Prentice Hall, Upper Saddle River, New Jersey, 1999.
- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.
- ↑ "Sea stacks"britannica.com பரணிடப்பட்டது 2009-04-14 at the வந்தவழி இயந்திரம்