கடல் வளைவு (sea arch) என்று அழைக்கப்படுவது கடல் அலைகளால் அரிக்கப்பட்டு உருவாகும் ஒரு நில அமைப்பு ஆகும். அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக அலைகளானது ஓங்கலின் அடிமட்டத்தில் குடைந்து குகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலை தொடரும்போது இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடல் வளைவு உருவாகின்றன.[1] மேவும் அலைகளால் ஏற்படுகின்ற தொடர் அரிப்பானது கடல் வளைவை முழுவதுமாக நொறுங்கி போக வழிவகுக்கிறது.[2]

மால்ட்டாவில் உள்ள ஆஜர் விண்டோ என்னும் கடல் வளைவு, இது 2017 ல் சரிந்தது

மேற்கோள்கள்

தொகு
  1. "sea arch". http://encyclopedia2. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2017.
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வளைவு&oldid=3313172" இலிருந்து மீள்விக்கப்பட்டது