கடல் வெள்ளரி

முட்தோலி உயிரினம்
கடல் வெள்ளரி
சிவப்புக் கோடிட்ட கடல் வெள்ளரி (Thelenota rubralineata)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
உருளை முட்தோலி
வகுப்பு:
கடல் வெள்ளரி

de Blainville, 1834
Orders

கடலட்டை‎ அல்லது கடல் வெள்ளரி (Sea cucumber) என்பது முட்தோலி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது கடலின் அடி ஆழப்பகுதியில் வாழ்கின்றது. இது நீண்ட உருளை வடிவில் வெள்ளரி போன்று தோற்றமளிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் புறப்பரப்பு எளிதில் நெகிழக் கூடிய தோலினால் மூடப்பட்டுள்ளது. முன் முனையில் காணப்படும் வாயினைச் சுற்றி 10 மரங்களை ஒத்த நீட்சிகள் உள்ளன. இவை உணவூட்டலில் பங்கேற்கின்றன. பின் முனையில் மலப்புழை காணப்படுகிறது. வயிற்றின் அடிப்பகுதி கடற் தளத்தை ஒட்டியவாறு வாழ்கிறது. அடிப்பகுதியில் மூன்று கைவரி பள்ளப் பகுதிகள் காணப்படுகிறது. இதில் பாதம் இயக்கத்திற்கான கால்களை கொண்டிருக்கிறது. முதுகு பரப்பில் இரண்டு கைவரி பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் மூன்று கைவரி பள்ளப் இடைப் பகுதிகள் காணப்படுகிறது. இப்பரப்பில் காணப்படும் குழல் கால்களில் உறிஞ்சிகள் இல்லை. மட்கிய பொருட்களையும், மிதவை உயிரிகளையும் உண்டு வாழும். இது கடற் தளத்தில் ஊர்ந்து மெதுவாக இயக்கம் கொள்கிறது. சுவாசத்தில் சுவாச மரங்கள் பங்கேற்கின்றன. சுவாச மரங்கள் குடலுக்கு இரு மருங்கிலும் காணப்படுகின்றன. ஆண், பெண் உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன. ஆரிக்குலேரியா லார்வா இதன் வாழ்க்கை சுழற்சியில் தோற்றுவிக்கப்படுகிறது. மறைமுக வளராக்கம் கொண்டது. எதிரிகள் தாக்கும்போது தனது அனைத்து உள்ளுறுப்புகளையும் துண்டித்து கொள்கிறது. இவ்வுறுப்புகள் விரைவில் மறுவளர்ச்சி பெறுகிறது. இந்நிகழ்ச்சி தன்துண்டாக்கம் எனப்படுகிறது. கடல் அடிப்பகுதியில் துப்புரவு பணியை மேற்கொள்கிறது. கடத்தல் மற்றும் மாசு காரணமாக அழிந்து கொண்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. முதுகெலும் பற்றவை, சபா. தியாகராசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வெள்ளரி&oldid=2898508" இலிருந்து மீள்விக்கப்பட்டது