கடவுச் சீட்டு

வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் கடவுச்சீட்டு ஒலிப்பு) (Passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.[1][2][3]

இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்
இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்

கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க விசா பெறமுடியாது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of Passport". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-18.
  2. "A History of the Passport". History (in ஆங்கிலம்). 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2024-07-01.
  3. Cane, P & Conaghan, J (2008). The New Oxford Companion to Law. London: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199290543.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுச்_சீட்டு&oldid=4164939" இலிருந்து மீள்விக்கப்பட்டது