கடவுளின் அன்னையே கன்னி மரியே!

கடவுளின் அன்னையே கன்னி மரியே! (கிரேக்கம்: Ὑπὸ τὴν σὴν εὐσπλαγχνίαν; இலத்தீன்: Sub tuum praesidium) எனத் தொடங்கும் பாடலானது தூய கன்னி மரியாவைக் குறித்து கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டின் முடிவில் பாடப்படும் நான்கு பாடல்களுள் ஒன்றாகும்.[1] இதுவே மிகவும் பழைய, இன்றும் வழக்கில் உள்ள கன்னி மரியாவின் பாடலாகும்.[2] இது பெரும்பாலும் கிருபை தயாபத்து செபத்தின் முடிவில் சொல்லப்படுவது வழக்கமாகும்.

இரக்கத்தின் அன்னை, 15ம் நூற்றாண்டு ஓவியம்

இப்பாடலில் ஒரு வடிவம் 3ம் நூற்றாண்டினைச்சேர்ந்த அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழி திருச்சபையின் கிறித்துமசு வழிபாட்டில் இடம்பெருகின்றது. சுமார் கி.பி 250இல் கிரேக்க மொழியில் இப்பாடல் எழுதப்பட்ட சுவடி உள்ளது.[3]

அந்தோனியோ சாலியரி, வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

பாடல்

தொகு
கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்
இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.

மேற்கோள்கள்

தொகு
  1. Cori Spezzati: Volume 2: An Anthology of Sacred Polychoral Music by Anthony F. Carver 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-10635-4 page 121
  2. Choral Repertoire by Dennis Shrock 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-532778-0 page 585
  3. Matthewes-Green, Frederica (2007). The Lost Gospel of Mary: The Mother of Jesus in Three Ancient Texts. Brewster MA: Paraclete Press. pp. 85–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55725-536-5. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)