கடவுளின் தாய் பேராலயம்

கடவுளின் தாய் பேராலயம் அல்லது வலியபள்ளி (Mother of God Cathedral) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கிருத்தவ பேராலயம் ஆகும். இது மலபாரில் உள்ள இலத்தீன் கத்தோலிக்க கிருத்தவர்களின் திருக்கூட்ட தலைமையகமாகும்.

கடவுளின் தாய் பேராலயம், கோழிக்கோடு

இந்த பேராலயமானது 1533 ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கன்னி மரியாவுக்கு கட்டபட்டது. இதை கோதிக் கட்டிடக்கலையில் இத்தாலிய கட்டிடக் கலைஞர்கள் வடிவமைத்தனர். இந்த தேவாலயம் 1599 மற்றும் 1724 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1923 ஆம் ஆண்டில் இந்த தேவாலயம் கோழிக்கோடு மறைமாவட்டத்தின் பாராலயம் ஆனது. பேராலயத்தில் 200 ஆண்டுகள் பழமையான புனித மேரியின் உருவப்படம் உள்ளது. இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுளின்_தாய்_பேராலயம்&oldid=3021592" இலிருந்து மீள்விக்கப்பட்டது