கடிய சிறுநீரகக் காயம்

கடிய சிறுநீரகக் காயம் (Acute kidney injury, AKI), முன்னதாக கடிய சிறுநீரகச் செயலிழப்பு (acute renal failure, ARF),[1] என்பது மிக விரைவான சிறுநீரகச் செயலிழைப்பைக் குறிக்கும். இதன் காரணங்கள் பலவாயினும் குருதியின் அளவு குறைதல் (குருதி வெளியேற்றம், நீர்மக்குறைவு போன்ற எக்காரணத்தாலும்), சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களுக்கு (சில வேதிகளும் மருந்துகளும்) வெளிப்படுத்தல், சிறுநீர்ப்பாதை அடைப்பு என்பன குறிப்பிடத்தக்கன.

கடிய சிறுநீரகக் காயம்
Kidney – acute cortical necrosis.jpg
எஞ்சியுள்ள உட்புறதிசுக்களின் கருமைக்கு எதிராக அடையாளப்படுத்தப்பட்ட வெளுத்த மேலுறையுடன் கூடிய நோயுற்ற சிறுநீரகத்தின் பகுதி. கடிய சிறுநீரகக் காயத்தினால் இந்த நோயாளி இறந்தார்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரகவியல்
ஐ.சி.டி.-10N17.
ஐ.சி.டி.-9584
நோய்களின் தரவுத்தளம்11263
MedlinePlus000501
ஈமெடிசின்med/1595
Patient UKகடிய சிறுநீரகக் காயம்
MeSHD007675

இந்த நோய் ஆய்வகச்சோதனைகளில் குருதியில் யூரியா வடிவத்தில் உள்ள நைத்ரசனின் (BUN) மற்றும் கிரியாட்டினின் அளவு உயர்ந்திருத்தல் அல்லது போதிய அளவில் சிறுநீர் வெளியேற்றாதிருத்தல் ஆகியன கொண்டு கண்டறியப்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம், மிகை பொட்டாசியம், மிகை யூரியா, உடல் நீர்மச் சமநிலையில் மாற்றங்கள் போன்ற கோளாறுகளும் ஏனைய உறுப்புகளுக்குப் பாதிப்பும் ஏற்படுகின்றன. சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சை போன்ற ஆதரவான கவனிப்பு மற்றும் அடிப்படை காரணியை குணப்படுத்துதல் என இதற்கான சிகிட்சை மேலாளப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

கடிய சிறுநீரகக் காயம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


  1. Webb S, Dobb G (December 2007). "ARF, ATN or AKI? It's now acute kidney injury". Anaesthesia and Intensive Care 35 (6): 843–4. பப்மெட்:18084974.