கடுவேகக் கெடு பிரசவம்

சாதாரணமாக நடைபெறும் சராசரி நேரத்தை விட குறுகிய நேரத்தில் நிகழும் பிரசவம் கடுவேகக் கெடுபிரசவம் எனப்படும் (precipitate labour). இதில் பிரசவத்தின் மூன்று நிலைகளும் ஒரே நிலையாக நடந்து முடிந்து விடும். இது பன்முறை பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கே (multipara) பெரும்பாலும் ஏற்படும். ஏனெனில் பன்முறை பிள்ளை பெற்ற பெண்ணின் பிரசவப்பாதை வி‌சாலமாக இருக்கும். எனவே தாய் அறியாமலேயே குழந்தை கருப்பையில் இருந்து வெளியே வர வாய்ப்புண்டு. சில நேரங்களில் தாய் கழிவறையில் அமர்ந்து முக்கும் போது (straining) குழந்தை வெளிவந்து விடும். இதனால் குழந்தை கழிவறைக் கோப்பையில் விழுந்து தலையில் அடிபட வாய்ப்புண்டு. தொப்புள் கொடி (umbilical cord) சராசரியாக அரை மீட்டர் நீளமுடையது. இது குழந்தையின் எடையைப் பொதுவாகத் தாங்கிக் கொள்ளும் திறனுடையது.

சட்டம் சார் மருத்துவ முக்கியத்துவம் தொகு

கடுவேகக் கெடு பிரசவத்தால் இறந்த இளங்குழந்தையை உறவினர்களோ தாயோ கொன்றதாக வழக்குப் பதியவும் குழந்தையைக் கொன்று விட்டு கடுவேகக் கெடு பிரசவத்தில் இறந்து விட்டதாய் ஏமாற்றவும் வாய்ப்புண்டு.

வரலாற்றில் தொகு

சித்தார்த்த கௌதம புத்தரின் தாயான மாயா தேவி பிரசவத்தின் பொருட்டு தாய் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வழியில் அழகிய சால மரத்தைக் கண்டிறங்கினார். காற்றில் அழகாக ஆடிக்கொண்டிருந்த விழுதொன்றைப் பிடிக்கும் பொருட்டு சற்று எக்கினார். அவ்வேளையில் புத்தர் பிறந்தார்” என்பதாகச் சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுவேகக்_கெடு_பிரசவம்&oldid=589030" இலிருந்து மீள்விக்கப்பட்டது