கடைசல் இயந்திரம்

(கடைசல் எந்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயந்திரங்களின் தாய் என்று அழைக்கப்படும் கடைசல் இயந்திரம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம் ஆகும். கடைசல் இயந்திரம் மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மாட்ஸ்லே என்ற பொறியாளர் 1797-ஆம் ஆண்டு மரை வெட்டும் கடைசல் இயந்திரத்தை வடிவமைத்தார். இன்றைய நவீன கடைசல் இயந்திர வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும்.[1][2][3]

உருளுருவாக்கி இயந்திரம்

வரலாறு தொகு

எண் காலம் இயக்கமுறை
1. பண்டைக்காலம் (கி.மு.1300) இருமனிதர்கள் (manual)
2. இடைக்காலம் (கி.பி.1600) வணரி (crank or pedal)
3. தொழிற்புரட்சி (கி.பி.1900) பொறி (engine)
4. கி.பி.1920 மின்னோடி (motor)
5. கி.பி.1950 பணிப்பியங்கி (servo mechanism)

உருவங்கள் தொகு

இவ்வெந்திரத்தில் செய்யக்கூடிய உருவங்கள்
 • உருளை (cylinder)
 • கூம்பு (cone)
 • கோளம், பந்து (sphere)

எந்திர வினைகள் தொகு

இதன் மூலம் செய்யக்கூடிய வினைகள்:

 • கடைதல் (turning)
 • முகக்கடைதல் (face turning)
 • கூம்புதல் (tapering)
 • துளையிடுதல் (drilling & boring)
 • மரையிடுதல் (threading)
 • பொளைதல் (knurling)
 • காடி எடுத்தல் (grooving)
 • மூலை மழுக்குதல் (chamfering or filleting)
 • சீராக்குதல் (finishing)

பாகங்கள் தொகு

 • தளம் (bed & base)
 • தலைப் பகுதி (head stock)- சுழலியை சுழற்றும் இயங்குகருவிகள் உள்ள பகுதி.
 • சுழலி (spindle)- பிடிப்பியை பொருத்துமிடம்.
 • பிடிப்பி &(chuck)&(chuck key)- மூலப்பொருளை கவ்விக்கொள்ளும் கருவி.
 • பின் தாங்கி (tail stock) - மூலப்பொருளை தாங்கவோ துளைகருவியை பிடிக்கவோ உதவுமிடம்.
 • கருவிப்பீடம் (tool rest) - கருவிகளை தாங்கிப்பிடிக்குமிடம்.
 • திருகேற்றி (lead screw) - கருவிப்பீடத்தின் அசைவுகளை கட்டுப்படுத்தும் கருவி.

வகைகள் தொகு

 • 1.மர உருளுருவாக்கி (Woodworking lathes)
 • 2.உலோக உருளுருவாக்கி(Metalworking lathes)
 • 2.1.சுழல்படுகை உருளுருவாக்கி (turret lathe)
 • 2.2.நங்கூரவுருளை உருளுருவாக்கி (capstan lathe)
 • 2.3.க.எ.க. உருளுருவாக்கி(க.எ.க.-கனிணி என் கட்டுப்பாடு) (CNC lathe)
 • 2.4.பகுதானியங்கி உருளுருவாக்கி (semi automatic)
 • 3.கண்ணாடி உருளுருவாக்கி (Glassworking lathes)
 • 4.தகர உருளுருவாக்கி (Metal spinning lathes)
 • 5.ஆபரண உருளுருவாக்கி (Ornamental turning lathes)
 • 6.கடிகார உருளுருவாக்கி (Watchmaker's lathes)
 • 7.திருகுருவாக்கி (screw lathe)

தொழிற்புரட்சி தொகு

இக்கடைசல் இயந்திரங்கள் இல்லாமல் 18ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி நடந்திருக்க இயலாது. மரபு சார்ந்த வகைகள் என்று தற்போது வகைப்படுத்தப்படும் இயந்திரங்களான இக்கடைசல் இயந்திரம் மற்றும் அலைவு மைய இயந்திரங்கள் போன்றவை தொழிற்புரட்சியில் பெரும் பங்கு வகித்தவை. கடைசல் இயந்திரம் தவிர்த்து அகழ் இயந்திரமும் உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற முக்கியப் பொறிகளில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

வெளி இணைப்புகள் காணொளி தொகு

இவ்வெளி இணைப்பின் வலப்பக்கம் வரும் காணொளிகள் அனைத்தும் இவ்வெந்திரம் தொடர்பானதே.

மேற்கோள்கள் தொகு

 1. Lathes in Chapter 7 of US Army Training Circulation published in 1996 (Chemical Engineering Department, Carnegie Mellon University website)
 2. M. Oats, Joclyn (2021). An Illustrated Guide to Furniture History. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781000406108. https://books.google.com/books?id=0_kvEAAAQBAJ&q=Earliest+woodworking+lathe. 
 3. Clifford, Brian. "A brief history of woodturning". The Woodturner's Workshop. Woodturners' Guild of Ontario. பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைசல்_இயந்திரம்&oldid=3889751" இலிருந்து மீள்விக்கப்பட்டது