கட்டக காயல்

கேரளாவின் கொல்லம் நகரில் உள்ள ஓர் ஏரி

கட்டக காயல் (Kattaka Kayal) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் உள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி வட்டக்காயலை இணைக்கிறது, 36-ஏக்கர் (15 ha) பரப்பளவில் மருதடியில் உள்ளது. இதனுடன் நகரத்தில் அசுட்டமுடி ஏரியும் உள்ளது. .[2][3][4]

கட்டக காயல்
Kattaka Kayal
கட்டகாயல்
கொல்லத்தில் கட்டக காயல் இருப்பிடம்
கொல்லத்தில் கட்டக காயல் இருப்பிடம்
கட்டக காயல்
Kattaka Kayal
கொல்லம் நகரத்தில் அமைவிடம்
கொல்லத்தில் கட்டக காயல் இருப்பிடம்
கொல்லத்தில் கட்டக காயல் இருப்பிடம்
கட்டக காயல்
Kattaka Kayal
கட்டக காயல்
Kattaka Kayal (கேரளம்)
அமைவிடம்இந்தியா,கொல்லம், சக்திகுளங்கரா
ஆள்கூறுகள்8°55′23.0268″N 76°32′39.2136″E / 8.923063000°N 76.544226000°E / 8.923063000; 76.544226000
வகைஓடை
Part ofஅசுட்டமுடி ஏரி
முதன்மை வரத்துமருதடியில் வட்டக்காயல்
வடிநிலப் பரப்பு14.5 ha (0.056 sq mi)[1]
வடிநில நாடுகள்இந்தியா
மேலாண்மை முகமைகொல்லம் மாநகராட்சி
பதவிசாகர சம்சுகாரிகா சங்கம்
அதிகபட்ச நீளம்2 km (1.2 mi)
அதிகபட்ச அகலம்30 m (0.030 km)
மேற்பரப்பளவு36 ஏக்கர்கள் (15 ha)
Islandsஇல்லை
குடியேற்றங்கள்கொல்லம்

வரலாறு

தொகு

கட்டக் காயல் என்பது கொல்லத்தில் உள்ள அசுட்டமுடி ஏரி மற்றும் வட்டக்காயலின் ஒரு பகுதியாகும். இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு நீரோடை ஒரு காலத்தில் சக்திகுளங்கராவில் உள்ள பெரும்பாலான வணிக நடவடிக்கைகளுக்கு உயிர்நாடியாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் அதன் அகலம் 90 முதல் 120 மீட்டர்கள் (300 முதல் 390 அடி) ஆகும். அப்போது கட்டக காயல் பாதையில் மூன்று படகுத் துறைகள் இருந்தன, மேலும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பெரிய சரக்குக் கப்பல்கள் நிறுத்தப்படுவது அந்த நாட்களில் குயிலான் நகரத்தின் பொதுவான காட்சியாக இருந்தது. இது கரிமீன் மற்றும் பூமீன் உட்பட 20 க்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய மீன்களின் இருப்பிடமாகவும் இருந்தது.[2][5]

மறுமலர்ச்சி திட்டம்

தொகு

வட்டகாயல் மற்றும் கட்டக காயல் மறுமலர்ச்சி திட்டம் கொல்லத்தில் 1 நவம்பர் 2016 அன்று கொல்லம் மாநகராட்சி மேயர் வி. இராசேந்திரபாபு அவர்களால் தொடங்கப்பட்டது.[6] கட்டகாயல் புனர்சீவன பத்தாடி என்பது சக்திகுளங்கரை சார்ந்த கலாச்சார அமைப்பான சாகர சம்சுகாரிகா சங்கத்தின் ஒரு முன் முயற்சியாகும்.[7] இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏரியை சுத்தம் செய்தல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை உள்ளடக்கிய பல்வேறு கட்டங்களின் மூலம் இரண்டு ஏரிகளையும் புதுப்பிக்க வேண்டும் என்பதாகும்.[8]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "A stream fading into history". தி இந்து. 20 September 2004. Archived from the original on 1 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  2. 2.0 2.1 "A stream fading into historyg". தி இந்து. 20 September 2004. Archived from the original on 1 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  3. "Maruthadi - Maruthadi.Elisting.in". பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  4. "Water Resources - Government of Kerala". 7 March 2015. Archived from the original on 3 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  5. "Tender Details for 7916_15 - Government of Kerala". 7 March 2015. Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  6. "Lake revival programme launched - The Hindu". 2 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  7. "Lake Revival Programme Launched - Indiaeveryday.in". 2 November 2016. Archived from the original on 3 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
  8. "Lake revival programme launched - The Hindu". 2 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டக_காயல்&oldid=3741843" இலிருந்து மீள்விக்கப்பட்டது