கட்டளைக்குடியிருப்பு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கட்டளைக்குடியிருப்பு (Kattalaikudiyiruppu) இயற்கை எழில் கொஞ்சும் அழகியதோர் கிராமம். இங்குள்ள மக்கள் இனம் மொழி கடந்து இயற்கையோடு ஒன்றினைந்து வாழ்கின்றனர். பூகோளரீதியில் இக்கிராமமானது இந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையான 477-இல் (NH 477) அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி முன்னும் பின்னும் ஆறு (6) கிராமங்களை உள்ளடக்கி மத்தியஸ்தர் போல் நடுவில் அமைந்துள்ளது. அவை தெற்கே கற்குடி, வேம்பநல்லூர், தவனை வடக்கே இரவியதர்மபுரம், பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு. இங்கு வாழும் மக்களின் முதன்மை தொழில் விவசாயம்.
இக்கிராமம் கற்குடி கிராம ஊராட்சியின் கீழ் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியானது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.