கணக்கதிகாரம்
0-௦; 1-௧; 2-௨; 3-௩; 4-௪; 5-௫; 6-௬; 7-௭; 8-௮; 9-௯; 10-௰; 100-௱; 1000-௲
கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். "இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது." கணக்கதிகாரம் ௲௮௫௰[1] களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.த. செந்தில்பாபு. (௨௲௮)[2]. அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை[3]
- கணக்கதிகாரம் ௧௫[4]-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
- இதன் பழைய பதிப்பு ௲௮௭௨[5]-ல் வெளிவந்துள்ளது.[6] இது பிழை மலிந்த பதிப்பு. பிற்காலத்தில் இதன் திருந்திய பதிப்பும் வெளிவந்துள்ளது.
- "கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி" என்று இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.[7][8]
- ஆரிய மொழியிலுள்ள நூலைத் தமிழில் தருவதாக இவர் நூலினுள்ளே குறிப்பிடுகிறார்.
- நூல் அமைதி
- பாயிரம் ௧௭[9] பாடல்
- நூல் ௱௰[10] பாடல்
- வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.
நூலில் கூறப்படுபவை
தொகு- பின்ன எண்களின் பெயர்கள்
- முழு எண்களின் பெயர்கள்
- எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்.
- பொழுதுபோக்கு வினாவிடைக் கணக்குகள்
முதலானவை குறிப்பிடத் தக்கவை
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, ௨௲௫