கணவனின் தையல்

கணவனின் தையல் அல்லது கணவனின் முடிச்சு என்றறியப்படுவது பிரசவத்திற்கு பிறகு இளகிப் போன பெண்ணுறுப்பை, கணவனின் உடலுறவு இன்பத்துக்காக, தையல் போட்டு இறுக்கிக் கொள்ளும் முயற்சியாகும். இது அழகியல் அறுவை மருத்துவங்களின் கீழ் வைக்கப்படுகிறது. எனினும், இம்முயற்சி பெரும்பாலும் கண்டிக்கப்படுகிறது.[1][2]

மருத்துவப் பார்வை தொகு

பிரசவத்தின் போது பெண்ணுறுப்பு இளகிப் போவது அல்லது கிழிவது வழக்கம். கிழியும் பட்சத்தில் குருதிப்பெருக்கை நிறுத்த, மருத்துவர்கள் தையல் இடுவார்கள். அப்படி தையல் இடும் போது, ஆணின் இன்பத்திற்காக பெண்ணுறுப்பை இறுக்கிக் கொள்ள வேண்டி, தேவைக்கு மிகுதியாக போடப்படும் தையல் வாழ்நாள் அசௌகரியத்தையும் வலியையும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.[3][4]

மருத்துவ வரலாற்றைக் காணும் போது இவ்வழக்கம் 1885 முதலே இருந்து வந்ததாகத் தெரிகிறது. டெக்சாஸ் மருத்துவ குழுமத்தின் பரிவர்த்தனைகள்[5] என்னும் நூலில், இந்த வழக்கத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இன்று வரை இந்த பொருண்மையின் கீழ் மிகுதியான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் எத்தனை பெண்களுக்கு இது நிகழ்த்தப்படுகிறது என்பது தெரிவதில்லை. இருப்பினும், தங்களின் ஒப்புகை இன்றி தையல் இடப்பட்டதாக அறிக்கை கூறியுள்ளனர் பெண்கள்.[6]

புனைவு பயன்பாடு தொகு

கார்மன் மரியா மச்சாடோ 2014 இல் எழுதிய 'கணவனின் தையல்' என்கிற ஆங்கில சிறுகதை இந்த வழக்கத்தை கதை வழியே விவரிக்கவும் விமர்சிக்கவும் செய்கிறது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "தையலுக்கு அஞ்சும் தாய்மார்கள் - ஃபாதர்லி டாட் காம் ஆங்கிலக் கட்டுரை".
  2. ஷீலா கிட்சிங்கர் (1994). தி இயர் ஏஃப்ட்டர் சைல்ட்பெர்த் (முதல் பதிப்பு ). ஆக்ஸ்ஃபோர்டு: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பத்திரிக்கை. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0192177841. 
  3. "கணவனின் தையல் ஒரு புரளியன்று - ஹெல்த்லைன் ஆங்கிலக் கட்டுரை".
  4. "கணவனின் தையல் என்கிற பெயரில் வாழ்நாள் கொடுமை - தி இண்டிப்பெண்டண்ட் ஆங்கிலக் கட்டுரை".
  5. "டிரான்ஸாக்ஷன்ஸ் ஆஃப் தி டெக்சாஸ் மெடிக்கல் அசோஷியேஷன் - கூகுள் நூல்கள்".
  6. "கணவனின் தையலும் விடையில்லா வலிகளும் - வைஸ் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
  7. "தி ஹஸ்பண்ட் ஸ்ட்டிச் - ஆங்கிலச் சிறுகதை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவனின்_தையல்&oldid=3113308" இலிருந்து மீள்விக்கப்பட்டது