கணேஷ் தாமோதர் சாவர்க்கர்

மராத்திய புரட்சியாளர் (1879-1945)

கணேஷ் தாமோதர் சாவர்க்கர் (Ganesh Dāmodar Sāvarkar) (13 சூன் 1879 - 16 மார்ச் 1945)[1] 16 மார்ச் 1945), விநாயக் தாமோதர் சாவர்க்கரின் மூத்த சகோதரரும்[2], இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் தனது இளைய சகோதரர் விநாயக் தாமோதர் சாவர்க்கருடன் இணைந்து 1904-ஆம் ஆண்டில் நாசிக் நகரத்தில் இளம் இந்தியர் சங்கத்தை நிறுவினார்.[3]

கணேஷ் தாமோதர் சாவர்க்கர்
பிறப்பு13 சூன் 1879
பாகூர், நாசிக் மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 மார்ச்சு 1945(1945-03-16) (அகவை 65)
சாங்கலி, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
மற்ற பெயர்கள்பாபா ராவ் சாவர்க்கர்
அறியப்படுவதுஇளம் இந்தியர் சங்கம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதிபாய்
உறவினர்கள்விநாயக் தாமோதர் சாவர்க்கர் (இளைய சகோதரர்)
சாவர்க்கர் சகோதரர்கள்: இடமிருந்து வலம்: நாராயணன், கணேஷ் மற்றும் விநாயக் மற்றும் சாந்தா, சகோதரி மைனா கலே மற்றும் யமுனா

27 செப்டம்பர் 1925 அன்று இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தை தோற்றுவித்த ஐவரில் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் ஒருவர் ஆவார்.[4] மற்றவர்கள் விநாயக் தாமோதர் சாவர்க்கர், கேசவ பலிராம் ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவார்.[5]:306

மேற்கோள்கள்

தொகு
  1. Som Nath Aggarwal (1995). The heroes of Cellular Jail. Publication Bureau, Punjabi University. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7380-107-5.
  2. Sain, Pravina Bhim (1989). Remembering Our Leaders: Mahadeo Govind Ranade. Children's Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7011-767-4.
  3. N. Jayapalan (2001). History of India. Atlantic Publishers & Dist. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-917-5.
  4. The Other Savarkar: Little-Known Facts About RSS Cofounder Babarao
  5. M. J. Akbar (1985). India: the siege within. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140075762.