கணையப் பல்புரதக்கூறு

கணையப் பல்புரதக்கூறு (Pancreatic polypeptide, (PP)) என்னும் புரதக்கூறு முதன்மையாக கணையத்தின் தலைப் பகுதியிலுள்ள கணையப் பல்புரதக்கூறு சுரப்பு செல்களிலிருந்து (PP cell) சுரக்கப்படுகிறது. முப்பத்தியாறு அமினோ அமிலங்களைக் கொண்ட இப்பல்புரதக்கூற்றின் மூலக்கூறு எடை அண்ணளவாக 4200 டால்டன்களாகும்[1].

கணையப் பல்புரதக்கூறு
அடையாளம் காட்டிகள்
குறியீடு PPY
Entrez 5539
HUGO 9327
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 167780
RefSeq NM_002722
UniProt P01298
வேறு தரவுகள்
இருக்கை Chr. 17 p11.1-qter
சுண்டெலியின் கணையத்திலுள்ள கணையப் பல்புரதக்கூறின் நோயெதிர்ப்பு திசுவேதியியல் படம், 200×

கணையத்தின் வெளிச்சுரப்பு, உட்சுரப்புகளை சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே கணையப் பல்புரதக்கூற்றின் பணியாகும். இரையக குடலியச் சுரப்புகள், கல்லீரல் கிளைக்கோசன் அளவுகள் ஆகியவற்றின் மீதும் இதன் தாக்கங்கள் உண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. Lonovics J, Devitt P, Watson LC, Rayford PL, Thompson JC (1981 Oct). "Pancreatic polypeptide". Arch Surg. 116 (10): 1256–64. பப்மெட்:7025798. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7025798. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கணையப்_பல்புரதக்கூறு&oldid=2746018" இலிருந்து மீள்விக்கப்பட்டது