இது காரத்தன்மையுள்ளது (ph 7 முதல் 8). கணைய நீரின் என்சைம்களாக டிரிப்சின், கைமோடி ரிப்சின் உள்ளன. இவை இரண்டும் டிரிப்சினோஜன், கைமோடிரிப்சினோஜன் எனும் நிலையில் சுரக்கப்படும். இவற்றை என்டிரோகைனேஸ் எனும் சிறுகுடல் நீரில் உள்ள பொருள் இயங்கும் நிலையிலுள்ள டிரிப்சின், கைமோடிரிப்சினாக மாற்றுகிறது. மேலும் கணைய நீரில் அமிலேஸ், லைப்பேஸ் (ஸ்டியாப்சின்) கார்பாக்சி பெப்டிடேஸ், நியூக்ளியேஸ் போன்ற என்சைம்களும் உள்ளன. அமிலேஸ் நொதி ஸ்டார்ச்சினை மால்ட்டோசாக பகுக்கும். டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ், நொதிகள், புரோட்டீன்களைச் செரிக்கும் புரோட்டியேசுகளாகும். இவை பா-பெப்டைடுகளை பெப்டோன்கள், சிறிய பெப்டைடுகள், அமினோ அமிலங்களாகச் சிதைவுறச் செய்கின்றன. லைப்பேஸ், கொழுப்பின் டிரைகிளிசரைடுகளை கொழுப்பு அமிலம், கிளிசராலாகப் பிரிக்கும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Mellanby, J. (1926-06-22). "The secretion of pancreatic juice". The Journal of Physiology 61 (3): 419–435. doi:10.1113/jphysiol.1926.sp002304. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3751. பப்மெட்:16993803. 
  2. Levink, Iris; Nesteruk, Kateryna; Visser, Dido; Sieuwerts, Anita; Fernandes, Celio; Jansen, Maurice; van Driel, Lydi; Poley, Jan-Werner et al. (2020). "Optimization of Pancreatic Juice Collection: A First Step Toward Biomarker Discovery and Early Detection of Pancreatic Cancer". The American Journal of Gastroenterology 115 (12): 2103–2108. doi:10.14309/ajg.0000000000000939. பப்மெட்:33105193. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணைய_நீர்&oldid=4164964" இலிருந்து மீள்விக்கப்பட்டது