கண்டனூர் நாகலிங்கய்யா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்டனூர் நாகலிங்கய்யா ஒரு தமிழ் அத்வைதப் புலவர். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகாமையிலுள்ள கண்டனூரில் பிறந்தார். நகரத்தார் சாதியில் பிறந்த இவர் மிகச்சிறந்த வணிகராக இளம்வயதில் திகழ்ந்தார். செல்வம் நிறைந்தாலும் மனதில் ஆன்மீகமே நிற்க் கோவிலூர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். கோவிலூர் மடாதிபதி ஞான தேசியரிடத்தில ஞானக்கல்வியும், உலக ஞானத்தையும் பெற்றார். பல தலங்களுக்குச்சென்று இறைப்பணி செய்தார். வடமொழியில் உள்ள அத்வைத நூல்களைத் தமிழ்ப்படுத்தினார். புதிதாகத் தமிழ் நூல்களையும் எழுதினார். இவரின் நூல்கள் அத்வைதத்தைப் பற்றி அமைந்திருந்தன. இவரது வாசுதேவமனனம் எனும் நூல் வடமொழியிலிருந்து தமிழுக்கு எழுதப்பட்டதாகும்.