கண்டீரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்டீரம் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலை. இது தற்கால நீலகிரி மலைகளுள் ஒன்று. ஈரம் கண்டு கண்டாகக் கிடக்கும் மலை கண்டீரமலை (பனிக்கட்டிக் கண்டுகள் கிடக்கும் மலை). இதன் சங்ககால அரசன் கண்டீரக்கோப் பெருநள்ளி. இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன் . இவனை வன்பரணர் பாடியுள்ளார். (புறம் 148, 149, 150)
தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான். (புறநானூறு 150)