தொட்டபெட்டா
தமிழ்நாட்டின் மிக உயரமான மலை தொட்டபெட்டா
தொட்டபெட்டா | |
---|---|
![]() தொட்டபெட்டா | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,636 m (8,648 அடி) |
புடைப்பு | 2,256 m (7,402 அடி) ![]() |
ஆள்கூறு | 11°24′8.7″N 76°44′12.2″E / 11.402417°N 76.736722°E |
புவியியல் | |
அமைவிடம் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு |
மூலத் தொடர் | நீலகிரி |
ஏறுதல் | |
எளிய வழி | தொட்டபெட்டா சாலை |

தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இதன் வழக்குச் சொற்கள் கருதத் தக்கவை. [1] இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.
தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.
தொட்டபெட்டா உச்சியில் வானாய்வுக்கூடமொன்று கி. பி. 1846-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கி. பி. 1859-இல் உதகமண்டலத்திற்கு ஒன்பது கல் தொலைவில் உள்ள இராணுவத்தாரின் தங்கல் இடமான வெல்லிங்டனுக்கு இது மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொட்டபெட்டாவிற்கே மாற்றப்பட்டது. ஆனால் இது இப்பொழுது பயன்படும் நிலையில் இல்லை. தொட்டபெட்டாவின் உச்சியிலிருந்து காண்போர் கண்களுக்கு உதகமண்டலத்தின் முழுக் காட்சியும் பேரழகோடு தென்படும். அதோடு கோவை மாவட்டத்திலுள்ள எல்லா மலைகளும் தென்படும்.[2]
வரலாறு
தொகுதொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. கோட்டையுடன் விளங்கிய இதனைச் சங்ககாலச் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை வென்று தனாக்கிக்கொண்டான். [3] யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. நள்ளி இந்த மலையின் அரசன். இவன் [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களுள் ஒருவன். [4] இந்த நள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோ ஈரமானது கண்டுகண்டாக இருக்கும் இடம் இது ஆகையால் நீலகிரி அக்காலத்தில் கண்டீர மலை எனப்பட்டது. [5]
'நளிமலை' என்னும் பெயரிலுள்ள 'நளி' என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். நளி என்னும் சொல் பெருமை [6], செறிவு [7] என்னும் பொருள்களை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது [8]
எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் என்று ஒரு பெண் குறிப்பிடுகிறாள். தோட்டி என்பது ஒரு கருவி. தொரட்டு, அங்குசம் ஆகிய கருவிகளைக் குறிக்கும். அவள் கையைத் தொரட்டு போல் வளைத்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தானாம். [9]
படங்கள்
தொகு-
Nilgiri Hills from atop Doddabetta
-
தொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் தோற்றம்
-
தொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் ஒரு தோற்றம்
-
தொலைநோக்கி இல்லம்
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஆநமுடு மட்டும் மீஸப்புலிமலை பிராது இது தான் உயராமாணா மலை.
- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். Retrieved 17 நவம்பர் 2020.
- ↑ ஆரெயில் தோட்டி வௌவினை - 8ஆம் பத்து பாடல் 71
- ↑ *நளிமலை நாடன் நள்ளி - சிறுபானாற்றுப்படை
- ↑ புறநானூறு 151 கொளுக் குறிப்பு
- ↑ தடவும் கயவும் நளியும் பெருமை தொல்காப்பியம் உரியியல் 2-320
- ↑ 'நளி' என் கிளவி செறிவும் ஆகும் தொல்காப்பியம் உரியியல் 2-323
- ↑ 'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி, அம்மலை காக்கும் அணி நெடுங் குன்றின், பளிங்கு வகுத்து அன்ன தீம் நீர், நளிமலை நாடன் நள்ளி' - புறம் 150
- ↑ நல்லந்துவனார் பரிபாடல் 8-86
வெளியிணைப்புகள்
தொகு- Hills and Peaks பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- DODDABETTA:|தொட்டபெட்டா பரணிடப்பட்டது 2011-01-14 at the வந்தவழி இயந்திரம்