வெல்லிங்டன் பாசறை நகரம்

வெல்லிங்டன் பாசறை நகரம், (Wellington Canntonment Town) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், குன்னூர் நகரத்திற்கு வடக்கே 3 கீமீ தொலைவில் 1,700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வெல்லிங்டன் இராணுவ நகரம் ஆகும். 4,949 வீடுகள் கொண்ட வெல்லிங்டன் இராணுவ நகரம், ஏழு வார்டு உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இக்குழுவின் அலுவல்முறை தலைவராக, வெல்லிங்டன் கண்டோன்மென்ட்டின் தலைமை நிர்வாகியான பிரிகேடியர் இருப்பார். மேலும் இராணுப் பாசறையின் ஒரு மருத்துவர் மற்றும் பொறியாளர் நிர்வாகக் குழுவில் இருப்பர். [1] இங்கு முப்படை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. [2]

வெல்லிங்டன்
பாசறை நகரம்
வெல்லிங்டன் வழியாகச் செல்லும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் தொடருந்து
வெல்லிங்டன் வழியாகச் செல்லும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் தொடருந்து
வெல்லிங்டன் is located in தமிழ் நாடு
வெல்லிங்டன்
வெல்லிங்டன்
இந்தியாவின் தமிழ்நாட்டில் வெல்லிங்டனின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°22′N 76°48′E / 11.37°N 76.8°E / 11.37; 76.8ஆள்கூறுகள்: 11°22′N 76°48′E / 11.37°N 76.8°E / 11.37; 76.8
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
ஏற்றம்1,855
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்19
அலுவல் மொழி
 • அலுவல் மொழிகள்தமிழ், ஆங்கிலம், இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்http://www.cbwellington.in/adm.php

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வெல்லிங்டன் பாசறை நகரத்தின் மொத்த மக்கள்தொகை 19,462 ஆகும். இதில் இராணுவத்தினர் எண்ணிக்கை 6789 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 10,867 ஆகவும்; பெண்கள் 8,595 ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,939 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 791 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 80.09%. ஆகவுள்ளது.. மக்கள்தொகையில் இந்து சமயத்தினர் 67.73% , கிறித்தவர்கள் 25.11%, இசுலாமியர் 6.18%, சீக்கியர்கள் 0.86%; மற்றவர்கள் 0.12% ஆக உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 37.36% மற்றும் 1.55% ஆகவுள்ளனர். [3]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Wellington Cantonment Board
  2. Defence Services Staff College
  3. Wellington Population Census 2011