கண்டுபிடிப்புச் சித்தாந்தம்

கண்டுபிடிப்புச் சித்தாந்தம் (Discovery doctrine) என்பது ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்பட்ட ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும். இக் கருத்துரு 1823 இல் இருந்து இன்றுவரை பல்வேறு வழக்குகள் மூலம் இன்றும் முன்னிறுத்தப்படுகிறது. இச் சிந்தாந்தம் ஐரோப்பிய கிறித்தவ அரசின் ஆட்சியின் கீழ் இல்லாத மக்கள் வாழும் அமெரிக்க நிலப்பரப்புக்களை எந்த ஐரோப்பிய, கிறித்தவ, குடியேற்றவாத நாட்டு மக்கள் முதலில் சொந்தம் கொண்டாடுகிறார்களோ, அவர்களின் அரசுக்கே அந்த நாடு சொந்தம் என்று நிலைநாட்டுகிறது. இந்தச் சித்தாந்தம் அமெரிக்கப் பழங்குடிமக்களின் நாடுகளையோ, நிலத்துக்கான உரிமைகளையோ ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்காக்களை பழங்குடிமக்கள் ஐரோப்பியர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரவிக் குடியேறி பயன்படுத்தி வந்தாலும், அந்த நாடுகளின் நிலங்களின் அவர்களுக்கான உரிமைகளை இந்தச் சிந்தாந்தம் முற்றிலும் மறுக்கிறது. பழங்குடிமக்கள் நிலங்கள் பறிபோக, அவர்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு, அமெரிக்காக்களில் ஐரோப்பியரின் குடியேற்றம் வேகமாக நிறைவேற இந்தச் சிந்தாந்தம் முக்கிய கருவியாக அமைந்தது. இது போன்ற காரணங்களால், ஐக்கிய நாடுகளின் முதற்குடிமக்களின் பிரச்சினைகளுக்கான நிலையான மன்றம் பழங்குடிமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் அடித்தளம் இந்தச் சட்டம் என்று விமர்சித்துள்ளது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Concluding session, Permanent Forum says impact of racist ‘Doctrine of Discovery’
  2. "Preliminary study of the impact on indigenous peoples of the international legal construct known as the Doctrine of Discovery" (PDF). United Nations Economic and Social Council. 4 Feb 2010. பார்க்கப்பட்ட நாள் 04 January 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)