கண்ணகி (பேகன் மனைவி)
பொதினி என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வேறொருத்தியோடு வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார்[1] கபிலர் [2] பரணர் [3] பெருங்குன்றூர் கிழார் [4] ஆகிய புலவர்கள் பேகனை இடித்துரைத்து மனைவி கண்ணகியோடு சேர்த்துவைக்கின்றனர்.