பொதினி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் பழனி என்னும் பெயருடன் விளங்குகிறது. ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி.

இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் முருகன். பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது. [1]

பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன்.[2] மற்றும் வையாவிக்கோப் பெரும்பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.

சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

அடிக்குறிப்பு

தொகு
  1. அறுகோட்டு யானைப் பொதினி - மாமூலனார் – அகம் 1
  2. நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர் பொதினி அன்ன நின் ஒண்கேழ் வனமுலை - மாமூலனார் – அகம் 61
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதினி&oldid=2565382" இலிருந்து மீள்விக்கப்பட்டது