முருகன் (அரசன்)
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர்.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2]
- இதனையும் காண்க முருகக் கடவுள்
அடிக்குறிப்பு
தொகு- ↑ வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி
அறுகொட்டு யானை பொதினி
ஆங்கண் சிறு காரோடன் பயினொடு
சேர்த்திய கல் போல் பிரியலம். - மாமூலனார் பாடல் அகம் 1 - ↑ முருகனைக் குறிப்பிடும் பாடல் விளக்கம்