கண்ணங் கூத்தனார்

கண்ணங் கூத்தனார் அல்லது கண்ணங்கூத்தனார் என்பவர் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கார் நாற்பது என்னும் நூலைப் பாடியவர். [1][2][3][4]

கண்ணங் கொற்றனார் என்னும் பெயர் கொண்ட புலவர் ஒருவர் நற்றிணைத் தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். இவர் கண்ணங் கூத்தனாருக்குச் சில நூற்றாண்டு காலம் முந்தியவர்.

கண்ணங்கூத்தனார் முல்லைத் திணைக்கு உரிய பெரும்பொழுதான காலம் பற்றிம் பாடியுள்ளார். தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் கார் காலத்தில் இல்லம் திரும்புவது வழக்கம். திரும்புவதற்குக் காலம் தாழும்போது தலைவி வருந்துவதும், தோழி தலைவியைத் தேற்றுவதும் போன்றவை நிகழும். இப்படிப்பட்ட செய்திகளைத் தொகுத்துக் கூறும் செய்திகள் இவரது பாடல்களில் உள்ளன.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணங்_கூத்தனார்&oldid=2717697" இலிருந்து மீள்விக்கப்பட்டது