கண்புரை அறுவைச் சிகிச்சை

கண்புரை அறுவை (Cataract surgery) என்பது மாந்தக் கண்ணில் உருவாகிய காட்சி மறைக்கும் இயற்கையான படிக வில்லையை (இது கண்புரை எனப்படுகிறது) நீக்கும் மருத்துவச் செயல்முறையாகும். அகவை முதிரும்போது வளர்சிதை மாற்றங்களால் படிகவில்லை நாரிழைகளில் கண்புரை உருவாகி அதன் ஒளிபுகும் தன்மையைக் குறைத்து பார்வைக் குறைபாட்டை அல்லது பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. அகவை முதிர்வு மாற்றங்களால் ஏற்படும் இந்தக் கண்புரை மட்டுமன்றி, இளங்குழவிகளும் பிறப்புவழி கண்புரையுடன் பிறப்பதுண்டு. நேரடி கண்நேர்ச்சியாலோ (கண்விபத்தாலோ) கண்சொட்டு மருந்துகளாலோ, குறிப்பாக பருவகங்களின் (steroids) நெடுங்காலப் பயன்பாட்டாலோ கண்புரை உருவாகலாம். அகச் சிவப்புக் கதிர்களுக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சுக்கும் நெடுங்காலத்துக்கு ஆட்பட்டாலும்கூட கண்புரை உருவாகும். பலரின் முதல் அறிகுறிகளாக விளக்குகளின் ஒளிக்குக் கன்பளிச்சிடுதல், இரவில் சிறுவிளக்கொளிக்கும் கண்பளிச்சிடுதல், குறைவான ஒளிமட்டங்களிலும் கண்கூசுதல் ஆகியவை அமைகின்றன. கண்புரை அறுவையின்போது, நோயாளியின் இயற்கையான புரையமைந்த வில்லை செயற்கை வில்லையால் மாற்றி வில்லையின் ஒளிபுகம் தனமை மீட்கப்படுகிறது.[1]

கண்புரை அறுவை
பிரிவிளக்காய்வில் புலப்படும் மாந்தக் கண் புரையின் பெருக்கக் காட்சி
ICD-9-CM13.19
MeSHD002387
மெட்லைன்பிளஸ்002957

இயற்கையான வில்லை அறுவையால் நீக்கப்பட்டதும், செயற்கை கண்ணக வில்லை பொருத்தப்படுகிறது (கண்மருத்துவர்கள் இதைப் "பதிக்கப்படுகிறது" என்கின்றனர்). கண்புரை அறுவை கண் மருத்துவரால் இதய மின்னலை வரைவிவழிக் கண்காணிப்புடன் அறுவையரங்கில் அல்லது மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. இதற்கு விழிவெளியுறை அல்லது விழிப்பின்னுறை விழிமேலுறைப் பகுதி மரத்துபோகச் செய்யப்படுகிறது. இம்முறை நோயாளிக்கு மிகவும் ஏந்தானதாகும். ஏறத்தாழ 90% அறுவைகள் நல்ல பார்வையுடனும் மிகக் குறைந்த சிக்கலுடனும் வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றன.[2] கவனிப்பாக குறைந்தது ஆறு மணி நேரத்துக்குள் பகல் நேரத்தில் குறைந்த இடையீட்டுடனும் உயர் பொறுப்புடனும் மிகச் சிறிய துணிப்புடனும் மிக விரைவான அறுவைக்குப் பிந்திய மீட்புடனும் கண்புரை அறுவை உலகெங்கும் செய்யப்படுகிறது.

முதன்மை அறுவை முறைகள்

தொகு

இரண்டு முதன்மையான அறுவைமுறை வகைகள் உலகெங்கும் வழக்கில் உள்ளன. முதல் அறுவைமுறை வில்லைக் குழம்பாக்கம் எனப்படுகிறது; இரண்டாவது அறுவைமுறையில் இருவகை புறவிழியுறை கண்புரை பிரிப்புகள் (புவிகபி- ECCE) அமைகின்றன. பெரும்பாலான அறுவைகளில் கண்ணக வில்லைகள் பொருத்தப்படுகின்றன. 2 முதல் 3 மிமீ அளவு வில்லைப் பிரிப்புக்குப் பொதுவாக மடிதகவு வில்லைகளும் பெரிய புறவிழியுறை பிரிப்புக்கு மடியாத வில்லைகளும் பொருத்தப்படுகின்றன. வில்லைக் குழம்பாக்க அறுவை முறையில் 2முதல் 3 மிமீ அளவு பிரிப்பே பயன்படுவதால் இப்பிரிப்பு அல்லது துணிப்பு தையல் போடாமலே மூடப்படுகிறது. புவிகபி (ECCE) முறை 10 முதல் 12 மிமீ வரையிலான பெரிய புரைபிரிப்பை பயன்படுத்துவதால் இப்பிரிப்பு தையல்வழியாகவே மூடப்படுகிறது. இதனால் இது கையால் செய்யும் சிறுபிரிப்பு கண்புரை அறுவையாக (கைசிகஅ-MSICS) மாற்றிச் செய்யப்படுகிறது. அகவிழியுறை கண்புரை பிரிப்பு முறை வில்லைக் குழம்பாக்க முறையாலும் புறவிழியுறை கண்புரை பிரிப்பு முறையாலும் காலாவதி ஆகிவிட்டது.

வளர்ச்சியுற்ற நாடுகளில் வில்லைக் குழம்பாக்க முறையே பரவலாகப் பயன்படுகிறது. இம்முறையின் கூடுதலான செலவாலும் வில்லைக்குழம்பாக்க எந்திரத்தின் கூடுதல் விலையாலும்அதைச் சார்ந்த கழிதகவுக் கருவியாலும் புவிகபி- ECCE முறையும் கைசிகஅ –MSICS முறையும் வளரும் நாடுகளில் பரவலாகப் பயன்படுகிறது.

அறுவைமுறையின் பல்வேறு வகைகள்

தொகு
 
நாவாயியல் மருத்துவ மையத்தில் வில்லைக் குழம்பாக்க ஆய்கோலையும் 9வலது கையில்) தறிப்பிக் கருவியையும் இடது கையில்) பயன்படுத்திச் செய்யும் கண்புரை அறுவை
 
அண்மையில் செய்த கண்புரை அறுவை. மடிதகவு கண்ணக வில்லை பொருத்தப்படுகிறது. நிலையான விரிந்த கண்பாவைக்கு வலதில் உள்ள சிறுபிரிப்பையும் மிக மெல்லிய குருதிக் கசிவையும் பார்க்கலாம்.

கண்புரை அறுவைக்காக பல்வேறு அறுவை முறைகள் பயன்படுகின்றன:

  • வில்லைக் குழம்பாக்க முறை (phaco)வளரும் நாடுகளில் பரவலாகச் செய்யப்படும் நுட்பமாகும்.
  • கையால் செய்யும் சிறுபிரிப்புக் கண்புரை அறுவை முறை (கைசிகபுஅ-MSICS):
 
புவிகபி அறுவைக்குப் பிறகு மிகமுதிர்ந்த கண்புரைக் கருப்பகுதி
  • புறவிழியுறைக் கண்புரை பிரிப்பு முறை (புவிகபி-ECCE): இம்முறை இயற்கையான வில்லை முழுவதையும் பிரித்து நீக்க பின்னமையும் மீள்தகவு வில்லையுறை கண்ணக வில்லையைப் பொருத்துவதற்காக முழுமையாக விடப்படுகிறது.[3] இம்முறையில், விழிப்படலத்திலோ அல்லது வெண்விழியிலோ 10 முதல் 12 மிமீ அளவுக்குப் பெரிய ஓட்டையிட்டு அதன்வழியாக கையால் முழுவில்லையையும் பிரிக்கின்றனர். இதற்குப் பெரிய ஓட்டையும் தையலும் தேவைப்பட்டாலும், வன்புரைக்கும் வில்லைக் குழம்பாக்க முறை சிக்கலானதாகவும் அமையும்போது, நோயாளிகளுக்கு உரிய நிலைமையை அறிவித்துவிட்டு இந்த மரபான அறுவைமுறையை மேற்கொள்ளலாம்.[4]
  • அகவிழியுறைக் கண்புரை பிரிப்பு முறை (அவிகபி) வில்லையையும் வில்லைச் சூழ்ந்த வில்லையுறையையும் ஒரே துண்டாகப் பிரிக்கிறது.
  • பெம்டோநொடி ஒருங்கொளி முறை வில்லைக் குழம்பாக்க முறையை விட சில நன்மைகள் உள்ல முறையாகக் கருதப்படுகிறது.[5]

குளிர்நிலைக் கண்புரை பிரிப்பு முறை அல்லது தாழ்வெப்பநிலைக் கண்புரை பிரிப்பு முறை அவிகபி- ICCE முறையின் ஒரு வடிவமேயாகும். இதில் நீர்மக் காலகத்தால் (குளிராக்கப் பொருளால்) வில்லை உறைய வைக்கப்படுகிறது.[6]

கண்ணக வில்லைகள்

தொகு

புரைக் கண்ணாடி

தொகு

புரை கண்ணாடி கடினமானதாக இருக்கும். உருவங்கள் இயல்பை விட பெரியதாகத் தெரியும். பக்கப்பார்வை குறைவாக இருக்கும். இந்தக் குறைகளைச் சரிசெய்ய கண்ணக வில்லைகள் பொருத்தப்படுகின்றன.

கண்ணக வில்லை

தொகு

தீங்கற்ற நெகிழியால் செய்யப்பட்ட கண்ணக வில்லை (en: Intraocular Lens (IOL)) , அறுவையின்போது கண்ணில் பொருத்தப்படுகிறது. இது கருவிழி ஒட்டுக்கண்ணாடி போல் அல்லாது, கண்ணுக்குள் நிலையாகப் பொருத்தப்படுவதால், கண்ணுக்கு எவ்வகை ஊறும் ஏற்படாது. உடல் அசைவுகளினால் வில்லை தன் இருப்பை விட்டு விலகாது.

கண்ணக வில்லையின் நன்மைகள்

தொகு
  • பெரும்பாலும் எட்டப்பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவையில்லை. ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படலாம்.
  • பொருள் உருவங்கள் இயல்பாக ஏற்றம் இறக்கமின்றி தெளிவாகத் தெரியும்.
  • முழுப் பார்வையையும் விரைவில் பெறலாம்.

தையல் இல்லாத நவீன சிகிச்சை

தொகு

இம்முறையில் கண்ணில் 5 மில்லி மீட்டர் அளவிற்கு சிறிய துவாரம் போடப்படுகிறது. அல்ட்ராசோனிக் அலைகள் (Ultrasonic waves) உதவியுடன் புரை லென்ஸ் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஊசியின் உதவியுடன் வெளியே எடுக்கப்படுகிறது. பிறகு இதற்காகவே சிறப்பாக செய்யப்பட்ட ஐ.ஓ.எல் லென்ஸ் கண்ணில் பொருத்தப்படுகிறது.

சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தையல் போட வேண்டிய அவசியம் இல்லை. காயம் விரைவில் குணமாகிவிடும்.

தையல் இல்லாத நவீன சிகிச்சையின் நன்மைகள்

தொகு
  • இம்முறையில் புரை முற்றும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்.
  • சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
  • தையல் போடத் தேவையில்லை. கண்ணில் எரிச்சல் ஏற்படாது. நீர் வடியாது, தையல் பிரிக்கும் அவசியமும் ஏற்படாது.
  • அதிக நாட்கள் ஓய்வு எடுக்கத் தேவையில்லை. விரைவில் பணிகளைச் செய்யமுடியும்.
  • அதிக நாட்கள் சொட்டு மருந்து உபயோகிக்கத் தேவையில்லை.
  • அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் அல்லது ஒரு நாள் கழித்து வீடு திரும்பலாம்.
  • அடிக்கடி பரிசோதனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை மட்டும் மறு பரிசோதனைக்கு சென்றால் போதுமானது
  • ஒரு மாதத்திற்குப் பின் நிலையான பார்வையைப் பெறலாம்.
  • அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து தொலைக்காட்சி பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம்.

குறிப்பு

தொகு
  • கண்ணில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு கண் மருத்துவரால் மட்டுமே பார்வையை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும்.
  • நோயாளி தையல் இல்லாத நவீன சிகிச்சைக்குத் தகுதியானவரா என்பதைக் கண் மருத்துவரே தீர்மானம் செய்ய முடியும்.

காட்சியகம்

தொகு

மேலும் காண்கo

தொகு

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. U.S. News & World Report, December 17, 2007, page 64.
  2. University of Illinois Eye Center. "Cataracts." Retrieved August 18, 2006.
  3. Extracapsular Cataract Extraction - Definition, Purpose, Demographics, Description, Diagnosis/preparation, Aftercare, Risks, Normal results, Morbidity and mortality rates, Alternatives Encyclopedia of Surgery: A Guide for Patients and Caregivers
  4. http://www.jerrytaneyesurgery.com/cataract-surgery
  5. Alió, JL; Abdou, AA; Puente, AA; Zato, MA; Nagy, Z (June 2014). "Femtosecond laser cataract surgery: updates on technologies and outcomes.". Journal of refractive surgery (Thorofare, N.J. : 1995) 30 (6): 420–7. doi:10.3928/1081597x-20140516-01. பப்மெட்:24972409. 
  6. Cryotherapy for cataracts. Encyclopedia of Surgery

நூல்தொகை

தொகு
  • Finger, Stanley (2001). Origins of Neuroscience: A History of Explorations Into Brain Function. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-514694-8.
  • Lade, Arnie; Svoboda, Robert (2000). Chinese Medicine and Ayurveda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1472-X.
  • Frampton, Geoff; Harris, Petra; Cooper, Keith; Lotery, Andrew; Shepherd, Jonathan (2014). "The clinical effectiveness and cost-effectiveness of second-eye cataract surgery: a systematic review and economic evaluation". Health Technology Assessment. Southampton UK: NIHR Journals Library. 18.68.
  • Prajna, N. Venkatesh; Ravilla, Thulasiraj D.; Srinivasan, Sathish (2015). "Ch: 11. Cataract Surgery". In Debas, H.T.; Donkor, P.; Gawande, A.; Jamison, D.T.; Kruk, M.E.; Mock, C.N. (eds.). Essential Surgery. Disease Control Priorities. Vol. 1 (3rd ed.). The International Bank for Reconstruction and Development / The World Bank. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4648-0346-8. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  • அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட கண் புரை குறித்த கையடக்க குறிப்பேடு

வெளி இணைப்புகள்

தொகு