கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன. கருவிழி கூம்பல், விழி வெண்படலம், வடு போன்ற கண் திசுக்கள் பொதுவாக சேகரிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

உலகின் முதல் கண் வங்கி நியூயார்க்கில் 1944ல் மருத்துவர். ஆர். டௌன்லி பேடன் என்பவரால் தொடங்கப்பட்டது.[1] 1961ல் 25 உறுப்பினர்களுடன் அமெரிக்க கண் வங்கி சங்கம் தொடங்கப்பட்டது.

கண் வங்கியின் செயல்பாடுகள்

தொகு
  • பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களைத் தானமாகப் பெற்றிட தயார் நிலையில் வைத்துள்ளது.
  • தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளை பரிசோதனை செய்து அவற்றைத் தரம் பிரித்தல்.
  • நல்ல நிலையிலுள்ள கருவிழிகளை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருக்கு அனுப்பி வைத்தல்.
  • மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாத கரு விழிகளைப் பல்வேறு புதிய ஆராய்ச்சிப் பணிகளுக்கும், கண்களைப் பதப்படுத்தல் குறித்த ஆராய்ச்சிக்கும் பயிற்சி கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தல்.
  • கண் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
  • கண் நிபுணர்கள் அல்லாத பதிவு பெற்ற மருத்துவர்களுக்குச் சரியான முறையில் கண்களை எடுப்பது குறித்துப் பயிற்சி அளித்தல்
  • கண் தான மையங்களை ஏற்படுத்துதல் மற்றும் அதிகரித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றன.

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "வரலாறு". Archived from the original on 2009-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-04-07.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_வங்கி&oldid=3547554" இலிருந்து மீள்விக்கப்பட்டது