கண் (வேற்றுமை உருபு)

தமிழில் வேற்றுமை எட்டு வகைப்படும். அவற்றில் ஏழாம் வேற்றுமைப் பொருளில் உள்ள கண் இருப்பிடத்தை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியர் கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எனக் குறிப்பிடுகிறார். [1] [2]

பொருளோடு பொருந்தியும் சார்ந்தும் உள்ள மற்றொரு பொருளை உணர்த்துவது ஏழாம் வேற்றுமை.

  • கண், கால், கடை, இடை, தலை, வாய், உள், அகம், புறம், இல் என்பன பொருளின் உறுப்பாகப் பொருளோடு பொருந்தி இருப்பவை.
  • திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி முதலானவை ஒரு பொருளைச் சார்ந்துள்ள மற்றொரு பொருளை உணர்த்துவன.

இந்தக் கண் என்னும் உருபு பெரும்பாலும் ஒன்றன் பண்பினை உணர்த்துவதாக வரும். [3] [4]

அடிக்குறிப்பு

தொகு
  1. ஏழாகுவதே,
    `கண்' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
    வினை செய் இடத்தின், நிலத்தின், காலத்தின்,
    அனை வகைக் குறிப்பின் தோன்றும், அதுவே.(தொல்காப்பியம் 2-81}
  2. கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
    முன்சார் வலம் இடம் மேல்கீழ் புடைமுதல்
    பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
    உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே (நன்னூல் 302)
  3. நல்லார்கண் பட்ட வறுமை (திருக்குறள் 408)
  4. உண்டார்கண் அல்லது அடு நறாக், காமம் பொல்
    கண்டார் மகிழ் செய்தல் இன்று. (திருக்குறள் 1090)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_(வேற்றுமை_உருபு)&oldid=1562317" இலிருந்து மீள்விக்கப்பட்டது