கதிரியக்கத் தொகுப்பு வினை
கதிரியக்கத் தொகுப்பு வினை (Radiosynthesis) என்பது கதிரியக்கச் சேர்மங்கள் தயாரிக்க உதவும் ஒரு முழுமையானதானியங்குத் தொகுப்பு முறையாகும்[1]. கதிரியக்கத் தொகுப்பு வினையானது பல்வேறு அணுக்கரு இடைமுக அமைப்புகளால் செயற்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வமைப்புகள் ஈய கவசங்களால் பாதுகாக்கப்பட்டு பகுதி தன்னிச்சையாக கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு மற்றும் தொகுப்புச் செயல்முறை வகையை சார்ந்து இடைமுக அமைப்புகள் வேறுபடுகின்றன. இதன் விளைவாக தொகுப்பு நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு இடைமுக அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒவ்வாத்தன்மை அல்லது இடைமுக அமைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் கதிரியக்கச் சேர்மத்தின் உற்பத்தியை மேம்படுத்த சில தொகுப்பு நிலைகள் கைமுறையாக செய்யப்படுகின்றன[2].
கதிரியக்கத் தொகுப்பு வினையானது பின்வரும் அணுக்கரு இடைமுக அமைப்புகளை உட்கூறுகளாகக் கொண்டிருக்கிறது.
- நீர்த்தேக்கம்: வினைபடு பொருள்களை சேமித்து வைக்கப் பயன்படுகிறது.
- குழாய்கள் : அனைத்து உட்கூறுகளையும் ஒன்றாக இணைக்க உதவும்.
- அடைப்பிதழ் : திரவங்களின் பாய்மத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- அணு உலை : வினைகள் நிகழும் இடம்
- வெப்பநிலை மற்றும் கதிரியக்கம் உணரி: வெப்பநிலை மற்றும் கதிரியக்கத்தை உணர்ந்து கட்டுப்படுத்த உதவும்.
- உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகை: விளைபொருளை தூய்மையாக்கப் பயன்படும்.
இவை தவிர கலக்கிகள், வடிகட்டிகள், புட்டிகள், இனங்காட்டிகள் போன்ற வேறு சில கருவிகளும் தயாரிப்பு மற்றும் நிலைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுப்புக்கு முன்னரும் இடைமுக அமைப்புகள் நன்கு கழுவப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். கதிரியக்க உட்கருக்களின் அரை வாழ்வுக்காலம் காரணமாக தொகுப்புகளுக்கு இடையில் சிறிதளவு இடைவெளி அவசியமாகத் தேவைப்படுகிறது. படம் ஒர் இடைமுக அமைப்பின் மாதிரி வடிவம் ஆகும்.
கதிரியக்கத் தொகுப்பு வினைகள் பெரும்பாலும் சுழற்சியலைவி அல்லது கதிரியக்க அணுக்கரு மின்னியற்றிகளுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவது வழக்கமாகும்.