கதிரொளிர்வு

கதிரொளிர்வு (Radio luminescence) என்பது கதிரியக்கம் காரணமாகக் வெளிப்படும் பலதரப்பட்ட கதிர்களால் (α, β, γ), உடனொளிர் மற்றும் நின்றொளிர் பண்புடைய பொருட்களில், கதிரியக்கம் உள்ள மட்டும் வெளிப்படும் ஒளிர்தல் பண்பாகும். கதிரியக்கமுடைய பொருட்களுடன் ஒளிர்தல் பண்புடைய பொருட்களைக் கலந்து செய்யப்பட்ட வண்ணப்பூச்சுகள் (Paints) இருளிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். கடிகாரங்கள், சிலவகைப் பொம்மைகள், இரவில் ஒளிகாட்டி உதவும் இராணுவத் தளவாடங்கள் போன்றவற்றில் பயனாகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரொளிர்வு&oldid=2746019" இலிருந்து மீள்விக்கப்பட்டது