கத்தாரின் அரசியல்

கத்தாரின் அரசியல் ( politics of Qatar) என்பது ஒரு முழுமையான முடியாட்சி அரசியல் ஆகும். கத்தாரின் எமிர் மாநிலத்தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு வாக்கெடுப்பின்படி கத்தார் நாடு ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக மாறவேண்டும். கத்தார் நாட்டின் அரசியல் அமைப்பின்படி கத்தாரின் சட்டம் இயற்றுவதற்கு ஷரியத் சட்டம் முக்கிய ஆதாரமாக உள்ளது.[1][2]

சட்ட அமைப்பு தொகு

ஷரியா சட்டம், குடும்பச் சட்டம், மரபுரிமைச் சட்டம் மற்றும் பல குற்ற நடவடிக்கைகளுக்குரிய (விபச்சாரம், திருட்டு மற்றும் கொலை உட்பட்ட) சட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது[1][2]சில சந்தர்ப்பங்களில் ஷரியா அடிப்படையிலான குடும்ப நீதிமன்றங்களில், ஒரு பெண்ணின் சாட்சியம் ஒர் ஆணின் சாட்சியத்தில் பாதியாகக் கொள்ளப்படுகிறது. சில வழக்குகளில் பெண்ணின் சாட்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை[3] ஒழுங்கபடுத்தப்பட்ட குடும்பச் சட்டம் 2006 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கத்தார் நாட்டின் சட்ட அமைப்பானது குடிமைச் சட்டம் மற்றும் இசுலாமிய சட்டம் ஆகியவற்றின் கலவையாகும்.[4][5]

மது அருந்துதல் அல்லது சட்டவிரோத பாலியல் உறவுகள் போன்ற தவறுகளுக்கு தண்டனையாக சவுக்கடி வழங்குதல் கத்தாரில் பின்பற்றப்படுகிறது.[6] விபச்சாரத்திற்குத் தண்டனையாக 100 கசையடிகள் வழங்கப்பட வேண்டும் என கத்தார் நாட்டின் குற்றவியல் சட்டம் பிரிவு 88 அறிவிக்கிறது[7]. விபச்சாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் ஒரு இசுலாமியப் பெண் மற்றும் ஒரு இசுலாம் சமயத்தைச் சாராத ஆண் எனில் மரண தண்டனை அளிக்கப்படுகிறது[7]. 2006 ஆம் ஆண்டில் ஒரு பிலிப்பினோ பெண்ணுக்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக 100 சாடையடிகள் வழங்கப்பட்டன[7]. 2010 ஆம் ஆண்டில் 18 நபர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர், மது அருந்துதல் அல்லது சட்டவிரோத பாலியல் உறவுகள் போன்ற தவறுகளுக்காக 40 மற்றும் 100 கசையடிகள் பெற்றுள்ளனர்[8] . 2011 ஆம் ஆண்டில் 21 நபர்கள், பெரும்பாலும் வெளிநாட்டினர், மது அருந்துதல் அல்லது சட்டவிரோத பாலியல் உறவுகள் போன்ற தவறுகளுக்காக 30 மற்றும் 100 கசையடிகள் பெற்றுள்ளனர்[9] . 2012 இல் ஆறு புலம்பெயர்ந்த நபர்களுக்கு 40 அல்லது 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன[6] . இவ்வாறு தண்டனை பெற்றவர்களில் இசுலாமியர்கள் மட்டுமே மருத்துவத் தகுதியைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால் இவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை[10]. மிகச்சமீபத்தில் ஒரு புலம்பெயர்ந்த இசுலாமியருக்கு மது அருந்தியதற்காக 40 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது[11][12][13]. இதே போல 2014 ஆம் ஆண்டிலும் ஒரு புலம்பெயர்ந்த இசுலாமியருக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஒடியதற்காக 40 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது[14]ஷரியா சட்டம் இணைக்கப்பட்டுள்ளதால் சட்டப்பூர்வமான உடல்வருத்தத் தண்டனைகள் கத்தாரில் பொதுவானவையாகும்.

கல்லெறிந்து தண்டித்தலும் கத்தாரில் ஒரு சட்டப்பூர்வமான தண்டனையாகும்[15]. கத்தாரில், விசுவாசத் துரோகம் மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகக் கருதப்பட்டு மரணதண்டனை வழங்கப்படுகிறது[16]. தெய்வ நிந்தனை ஒரு குற்றமாகக் கருதப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. மதமாற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்[16], இசுலாமியர்களின் ஓரினச்சேர்க்கை குற்றத்திற்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது [17].

மது அருந்துதல், கத்தாரில் பகுதியாக சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. சில ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது[18][19]. இசுலாமியர்களுக்கு மது அருந்தும் உரிமை கத்தாரில் மறுக்கப்படுகிறது. மது அருந்திய இசுலாமியர் ஒருவர் பிடிபட்டால் கசையடி அல்லது நாடு கடத்தல் தண்டனை உறுதியாகும். இசுலாம் அல்லாத புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட உபயோகத்திற்காக மதுவை வாங்க அனுமதி வழங்கப்படுகிறது. கத்தார் விமான நிறுவனத்திற்கு மதுவையும் பன்றி இறைச்சியையும் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்நிறுவனம் நடத்தக்கூடிய ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே உண்டு. மது அருந்தும் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு மதுவும் பன்றி இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது[20]. 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மது விற்பனையை தாரளமாக்க முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன[21]

சமீப காலம் வரை தோகாவில் மனிதன் உருவாக்கிய செயற்கையான கத்தார் முத்துத் தீவில் இருக்கும் உணவு விடுதிகளில் மது பானங்கள் வழங்குவது அனுமதிக்கப்பட்டிருந்தது[18][19]. திசம்பர் 2011 முதல் இங்கும் மதுபானங்கள் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது[18][22] . இத்தடைக்கு காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை[18][19]. காரணங்கள் குறித்த ஊகங்கள் பலவாறாக உள்ளன. நடக்கப்பொஉம் தேர்தலைக் கருத்திற்கொண்டு அரசு நற்பெயர் ஈட்டவே இந்நடவடிக்கை என்றும் தீவு நிர்வாகிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள நிதித்தகராறு என்றும் காரணங்கள் கூறப்படுகின்றன[22].

2014 ஆம் ஆண்டில் கத்தார் அரசு மிதமான ஒரு பிரச்சாரத்தை துவக்கியது. அப்பிரச்சாரம் சுற்றுலா பயணிகளின் உடைக் குறியீடு தொடர்பான பிரச்சாரமாகும். பெண் சுற்றுலா பயணிகள் இறுக்கமான கால் சட்டைகள், குட்டைப் பாவாடைகள், கையில்லா மேலாடைகள் மற்றும் குட்டை மற்றும் இறுக்கமான பிற உடைகளை பொது இடங்களில் அணிந்து வரக்கூடாது என்றும் சுற்றுலா வரும் ஆண்கள் அரை கால்சட்டைகள் மற்றும் ஒற்றை உடைகளுடன் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது[23]

2014 இன்படி கத்தார் நட்டின் குற்றவியல் குறியீடுகள் கசையடி மற்றும் கல்லெறிதல் போன்ற தண்டனைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது. சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழு கத்தாரில் விதிக்கப்படும் இத்தகைய தண்டனைகள் சித்திரவதைகள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை முன்னிட்டு மரண தண்டனையை மட்டும் கத்தார் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறது.[24][25]

கத்தார் நிதியளிப்பு சட்ட விதிகளின்படி புரவலர்களுக்கு ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வசிப்பிட அனுமதியை இரத்து செய்வது, தொழிலாளர்களை திற்மையற்றவர்கள் என முத்திரை குத்தி வேறு தொழிலாளர்களை மாற்றிக் கொள்வது, ஓடிப்போன தொழிலாளர்கள் என காவல் துறையினரிடம் முறையிட்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற விடாமல் செய்வது போன்றவை இந்த அதிகாரத்திற்குள் அடங்கும்[26]. இதன் விளைவாக புரவலர்களால் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது. தொழிலாளர்கள் தங்கள் உரிமையைக் கேட்கவும் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது[26].

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 "The Permanent Constitution of the State of Qatar". Government of Qatar. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
 2. 2.0 2.1 "Constitution of Qatar". According to Article 1: Qatar is an independent Arab country. Islam is its religion and Sharia law is the main source of its legislation.
 3. "Qatar Gender Equality Profile" (PDF). UNICEF. Archived from the original (PDF) on 2014-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 4. "The World Factbook". U.S. Central Intelligence Agency. Archived from the original on 2013-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
 5. "Qatar" (PDF). US Department of State.
 6. 6.0 6.1 "Amnesty International Annual Report 2012 - Qatar". Amnesty International. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
 7. 7.0 7.1 7.2 "Filipino woman gets 100 lashes for giving birth in Qatar".
 8. "Qatar". Amnesty International.
 9. "Qatar". Amnesty International.
 10. "Annual Report". Amnesty International. 2014-10-23. http://www.refworld.org/docid/4fbe391669.html. 
 11. "Qatar sentences man to 40 lashes for drinking alcohol". Arabian Business.
 12. "Qatar sentences man to lashes for drinking alcohol". Al Akhbar. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
 13. "Qatar court orders lashing of Muslim barber over drinking alcohol". Al Arabiya.
 14. "Indian expat sentenced to 40 lashes in Qatar for drink-driving". Arabian Business.
 15. "Special report: The punishment was death by stoning. The crime? Having a mobile phone".
 16. 16.0 16.1 Jenifer Fenton. "Religious law, prison for "blasphemy", severe sexual inequalilty: Qatar’s human rights review". http://iheu.org/religious-law-prison-for-blasphemy-severe-sexual-inequalilty-qatars-human-rights-review/. 
 17. "What are the worst countries in the world to be gay?".
 18. 18.0 18.1 18.2 18.3 Alex Delmar-Morgan (7 January 2012). "Qatar, Unveiling Tensions, Suspends Sale of Alcohol". Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424052970203686204577115923124889872.html. பார்த்த நாள்: 17 January 2012. 
 19. 19.0 19.1 19.2 Jenifer Fenton (16 January 2012). "Qatar's Impromptu Alcohol Ban". The Arabist. http://www.arabist.net/blog/2012/1/15/qatars-impromptu-alcohol-ban.html. பார்த்த நாள்: 17 January 2012. 
 20. "Purchasing Alcohol in Qatar". Qatar Visitor. 2 June 2007. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
 21. Walid, Tamara (11 November 2009). "Qatar would 'welcome' Israel in 2022". The National. http://www.thenational.ae/sport/football/qatar-would-welcome-israel-in-2022. பார்த்த நாள்: 10 August 2013. 
 22. 22.0 22.1 James M. Dorsey (17 January 2012). "Debate Questions Emir's Powers To Shape Qatar's Positioning As Sports Hub And Sponsor of Revolts – Analysis". The Eurasia Review. http://www.eurasiareview.com/16012012-debate-questions-emir%E2%80%99s-powers-to-shape-qatar%E2%80%99s-positioning-as-sports-hub-and-sponsor-of-revolts-analysis. பார்த்த நாள்: 17 January 2012. 
 23. Aningtias Jatmika (29 May 2014). "Qatar Bans Tourists from Wearing Leggings in Public".
 24. Kelly, Tobias (2009). "The UN Committee against Torture: Human Rights Monitoring and the Legal Recognition of Cruelty". Human Rights Quarterly 313 (3): 777–800. doi:10.1353/hrq.0.0094. 
 25. Conclusions and Recommendations: Qatar (Report). UN Committee Against Torture. 25 July 2006. U.N. Doc. CAT/C/QAT/CO/1. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012. "Certain provisions of the Criminal Code allow punishments such as flogging and stoning to be imposed as criminal sanctions by judicial and administrative authorities. These practices constitute a breach of the obligations imposed by the Convention. The Committee notes with interest that authorities are presently considering amendments to the Prison Act that would abolish flogging." (Par. 12)
 26. 26.0 26.1 "Country Narratives". Human Trafficking Report 2011. Office to Monitor and Combat Trafficking in Persons, United States Department of State. June 2011. http://www.state.gov/j/tip/rls/tiprpt/2011/164233.htm. பார்த்த நாள்: 21 January 2012. 

புற இணைப்புகள் தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தாரின்_அரசியல்&oldid=3616052" இலிருந்து மீள்விக்கப்பட்டது