கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோயில்
கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர் அருகே உள்ள கத்திரிநத்தம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இவ்வூரை சப்தரிஷிநத்தம் என்றும் அழைக்கின்றனர்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலிலுள்ள மூலவர் காளகஸ்தீஸ்வரர் ஆவார். மூலவர் சன்னதியின் முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அருகே பைரவர், நாவுக்கரசர் சிலைகள் உள்ளன. அருகே தனியாக ஒரு லிங்க பானம் உள்ளது. கருவறையைச் சுற்றி வெளியே அமைந்துள்ள திருச்சுற்றில் கன்னிமூலை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, கால பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரன் ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மன் ஞானாம்பிகை ஆவார். அம்மன் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் வைஷ்ணவி, பிராமணி, இந்திராணி உள்ளனர்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயில் 30.6.1955 மற்றும் 5.6.2011இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுக்குறிப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கத்தரிநத்தம் அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.