கந்தகாக்சிசனேற்றம்
கந்தகாக்சிசனேற்றம் (Sulfoxidation) என்பது வேதியலில் இரண்டு வெவ்வேறு வினைகளைக் குறிக்கிறது. சல்பாக்சிசனேற்றம் என்ற பெயராலும் இவ்வினையை அழைக்கலாம்.
கந்தக டை ஆக்சைடும் ஆக்சிசனும் சேர்ந்த கலவையுடன் ஆல்க்கேன்கள் ஈடுபடும் வினையைக் குறிப்பது முதல் வகை வினையாகும். பரப்பியங்கிகள் எனப்படும் சர்பாக்டண்டுகளை தயாரிக்கப் பயன்படும் ஆல்க்கைல் சல்போனிக் அமிலங்களை உற்பத்தி செய்ய தொழில்துறையில் கந்தகாக்சிசனேற்ற வினை பயன்படுத்தப்படுகிறது. இவ்வினை நிகழ புற ஊதா கதிர்வீச்சு தேவைப்படுகிறது.[1]
- RH + SO2 + 0.5 O2 → RSO3H
வினை அதன் இயங்குருபு பொறிமுறைக்கு இணங்க இரண்டாம் நிலைகளையே ஆதரிக்கிறது. பொதுவாக இவ்வினையில் கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. சில குறைக்கடத்தி-உணர்திறன் விளைபொருள்களும் பதிவாகியுள்ளன.[2]
தயோ ஈதரை சல்பாக்சைடாக மாற்றும் ஆக்சிசனேற்ற வினை மற்றொரு வகை கந்தகாக்சிசனேற்ற வினையாகும்.
- R2S + O → R2SO
இவ்வினையில் குறிப்பாக ஐதரசன் பெராக்சைடு ஆக்சிசனுக்கான மூலமாகச் செயல்படுகிறது. .[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kosswig, Kurt (2005), "Sulfonic Acids, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a25_503
- ↑ Parrino, Francesco; Ramakrishnan, Ayyappan; Kisch, Horst (2008). "Semiconductor-Photocatalyzed Sulfoxidation of Alkanes". Angewandte Chemie International Edition 47 (37): 7107–7109. doi:10.1002/anie.200800326. பப்மெட்:18683178.
- ↑ Srour, Hassan; Le Maux, Paul; Chevance, Soizic; Simonneaux, Gérard (2013). "Metal-Catalyzed Asymmetric Sulfoxidation, Epoxidation and Hydroxylation by Hydrogen Peroxide". Coordination Chemistry Reviews 257 (21–22): 3030–3050. doi:10.1016/j.ccr.2013.05.010. https://hal.archives-ouvertes.fr/hal-00865625/file/CCR_2_Simonneaux-accepted.pdf.